பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6 எஸ். நவராஜ் செல்லையா

-ബ

டாங்க. ஆகா! அழகான பொம்மை! சாவி கொடுத்தா கத்தும், பேசும், ஒடும். இன்னைக்குள்ளே

பொம்மை வாங்கனுமே. எப்படி பணம் சேர்க்குறது?

(தனக்குள் பேசிக் கொள்கிருன்)

சாக்தி : பாடத்தைப் படின்னு அம்மா சொல்லிட்டுப் போருங்க. நீ என்னடான்ன, பணம் எப்படி சேர்க் குறது ன்னுபாராயணம் பண்ணிக்கிட்டு இருக்குறே:

நீ என்ன, வியாபாரம் பண்ணப்போறியா?

ராஜா : சாந்தி! நீ பேசாம போ.

சாந்தி : நான் உன் அக்கா. கோபப்படாதேடா.

ராஜா.: ஆமா சாந்தி. நீ எனக்கு ஒரு உதவிபண்ணனும். கோபமா பேசிட்டேன்...தப்பு...தப்பு...வேணும்னு தோப்புக்கரணம் போடறேன்.

சாந்தி என்னப்பா ஐஸ் வைக்குறே! விஷயத்தை

சொல்லு. முடியுமான்னு பார்க்கிறேன்.

ராஜா : எனக்கு ரெண்டு ரூபாய் வேணும்.

சாந்தி : பால் வேண்டாங்குற பூனை, உலகத்துல இருக் தாலும் இருக்கும். பணம் வேண்டாங்குற மனுஷன், உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்க போலிருக்கே! - -

ராஜா : என் கஷ்டம் தெரியாம பேசுறே சாந்தி! உனக்கு எப்பவும் கேலியும் கிண்டலுந் தான். இப்படின்ன, நான் உன் கிட்ட இதை சொல்லி இருக்கவே மாட்டேன்.

சாந்தி : படிக்க ஆரம்பிச்சா, பாடம்தான் நினைவுக்கு

வரனும். பணம் வரலாமா?