பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எஸ். நவராஜ் செல்லையா

முத்து : (அழுது கொண்டே)கான் திருடலேப்பா! நான்

சத்தியமா திருடலே.

சேகர் : பின்னே, உன் காலடியில எப்படி மாம்பழம்

வந்தது? தானு வந்து விழுந்ததா? இல்லே அணில் பறிச்சுப் போட்டதா?

கமலம் : உண்மையை சொல்லுப்பா...

சுந்தரம் : வழக்கமா திருடுற பசங்க மூணு பேரு”

மாமரத்துல ஏர்றதை, முத்து வர் ரப்ப பாத்திருக் கான்.

முத்து : அவனுங்க மரம் ஏர்ற ஸ்டைல் கல்லா இருந்தது. அப்படியே பார்த்துகிட்டே கின்னேன்.

சுந்தரம் : அப்புறம், அவனையறியாமலே. மரத்துக்குக் கீழேயே போயிருக்கான். மாம்பழத்தைப் பார்த் ததும் சாப்பிடனும்னு ஆசை.

முத்து : டேய் டேய் ஒரு பழம் போடுங்கடான்னு கத்தினேன். அந்தப்பசங்க பொத்து பொத்துன் னு, பறிச்சு போட்டு கிட்டே இருந்தானுங்க...

துரைசாமி : என்னடா சத்தம் கேட்குதுன்னு நான் ஓடி வந்தேங்க. மத்த பசங்க ஒடிட்டானுங்க.. முத்து மட்டும் தான் சிக்குனது. வந்த கோபத்துல, வந்த கோபத்துல.

கமலம் : ஏம்பா! அடிச்சு கொறுக்கிட்டியா! பழம்:

கேட்டது தப்பா... -

சேகர் : பழம் கேட்டது தப்பில்லே. மரத்துக்காரன் கிட்டே கேட்டிருந்தா,மதிப்பாவே கிடைச்சிருக்கும்.