பக்கம்:நவமணி இசை மாலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏莲 கலையும் இருக்கவேண்டியதில்லை. இவற்றின் தனிப்பட்ட சிறப்பை உணர்ந்து போற்றி இளைஞர்களை ஈடுபடச் செய்வோம். இது நிறைவேறினல் எனது ஆசை முற்றிலும் நிறைவேறி விடும். இதற்கு ஆண்டவன் அருள் புரிவாகை. சங்கீத வித்வத் சபையில் திசை திரும்பிப்போகும் இளைஞர்களை எவ்வாறு கவர்வது என்பதுபற்றி சர்ச்சை நடந்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோல சங்கீத வித்வத் சபையும் தமிழ் இசைச் சங்கமும் சேர்ந்து உழைத்து எப்பாடு பட்டேனும் நமது கர்நாடக இசையின் சிறப்பை-ஒப்புயர்வற்ற சிறப்பை நிலை நாட்டுவது முக்கிய கடமையாகும். எவ்வாறேனும் நமது கர்நாடக இசைக்கலே தனது தலே சிறந்த ஸ்தானத்தை அடையப் பாடுபடுவதுதான் நமக்குப் பெருமை தரும் என்று திரும்பத் திரும்பச் சொல்லுகின்றேன். ம. ப. பெரியசாமித்துரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/12&oldid=776702" இலிருந்து மீள்விக்கப்பட்டது