பக்கம்:நவமணி இசை மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்றியுரை து மும்மூர்த்திகளின் இசை மாறுபடாமல் பெரும் பாலும் அப்படியே அவர்கள் சீடர்களின்மூலம் வந்திருக்கின்றது. வாழையடி வாழையாக வந்துள்ள சீட்ர்கள்மூலம் அப்படியே கிடைத்திருக்கின்ற்து. இது நமக்கு பெரிய அதிர்ஷ்டமாகும். :இrஇன் வித்வான்கள் அந்த இசையைப் பின்பற்றி மெரு சுேற்றி போஷித்து சிறப்பூட்டுவதும் இதன் அனுகூலமாகும். ஏனென்ருல், மிகச்சிறந்த முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றவர்க்ளின் இசையமைப்பு நமக்குக் கிடைக்க வில்லே. சிறித் எண்ணிப் பார்த்தால் இசையமைப்புக் கிடைக்கப் பெருத வாக்கேயகாரர்கள்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நமது இ ைச யி ன் முன்ளுேடிகளான பூ புரந்தரதாஸர், தாளிப்பாக்கம் அன்னமாச்சாரியார், சதாசிவபிரம்மேந்திரர் போன்றவர்களின் இசையமைப்பு நமக்குக் கிடைக்கவில்லை. சுவர்தித் திருநாள் மகாராஜாவி னுடைய ஒரு சில உருப்படிகளையும், சங்கீத கலாநிதி முத்தையா பாகவதர் அவர்களும் சங்கீத கலாநிதி டாக்டர் செம்மங்குடி பூரீனிவாசய்யர் அவர்களும் இசையமைப்பை நன்கு செப்பனிட்டு பிரபலமாக்கி உள்ளன்ர். இராம நாடகம் எழுதிய காழி அருணுசல கவிராயரின் இசை அமைப்பைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாமலிருக்கிறது. அந்த உ ரு ப் படி க ளே சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் இசையமைத்து வெளியிட்டிருக்கிருர், "யாரோ இவர் யாரோ' என்ற உருப்படி இவைகளில் சிறந்த ஒன்ருகும். இதை முதலில் சாவேரி ராகத்தில்தான் பாடியுள்ளன்ர் என்று சங்கீத கலாநிதி திரு. T. L. வெங்கட்டராமய்யர் அவர்கள்ே கூறக் கேட்டிருக் கிறேன். ஆளுல் இப்பொழுது இந்த உருப்படியை பைரவி ராகத்தில் அமைத்துப்பாடுவதால் அதன் சங்கீதம் மிகஉயர்ந்தது என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது மிக உயர் தரமாக அமைந்துவிட்டது என்பது மெய்தான். ஆனல் இவ்வாறே உருப்படிகளின் இசையன்மப்பை மாற்றிக் கொள் வதுவும் சரியல்ல. அதனுல் அந்த உருப்படிக்கு குறிப்பிட்ட இசையமைப்பு ஏற்படாமலும் மெருகு ஏற்றிப் பாடப்படா ழலும் சங்கீத வித்வான்களின் கற்பனை வளத்தைக் கொண்டு போவித்து பாடப்படாமலும் இருந்துவிடும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/13&oldid=776713" இலிருந்து மீள்விக்கப்பட்டது