பக்கம்:நவமணி இசை மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨 இந்த உண்மையைக் கடைப் பிடிப்பவர் திரு. தூரன் என் பதை அவருடைய பாடல்களிலிருந்து நன்கு தெரியலாம். ஒவ்வொருவருக்கும் ஓர் இஷ்ட தெய்வம் இருக்கலாம். அந்த வகையிலே இவர் முருகனைத் தமது இஷ்ட தெய்வமாகக் கொண் டிருக்கிரு.ர். ஆனால் இவருக்கு வேறு மூர்த்தங்களிலும் ஈடுபாடுண்டு என்பதை இவருடைய பாடல்கள் காட்டுகின்றன. பக்தியின் பயணுகவே இந்தப் பாடல்களை இவர் இயற்றி இருப்பதால் சங்கீதத்திற்கு வேண்டிய சிறந்த அம்சங்கள் எல் லாம் இவற்றில் இயல்பாகவே அமைந்திருக்கின்றன. இவருடைய பாடல்கள் பாடுவதற்கு மிக எளிமையோடும் அழகிய சொற் கோர்வையோடும் அமைந்திருக்கின்றன. இவற்றைப் பாடும் போது தமிழின் அழகும், இசையின் அழகும் நன்கு வெளிப் படுகின்றன. - முசிறி சுப்பிரமணிய ஐயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/6&oldid=776893" இலிருந்து மீள்விக்கப்பட்டது