பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


139 நாகரிகமா நடப்பிங்க...போற இடித்துல ராஜா மாதிரியும் இருப்பிங்க. அப்புறம்...எனக்கும் கெளரவமா இருக்கும், (கொஞ்சம் நாணிக் கொள்கிருள்) ராமை: ஏண்டி! படிச்சாதான் புத்தி வரும்ங்கறியா. இந்தக் கட்டுக் குடுமியை அவிழ்த்து ஒரு தட்டு தட்டின, கட்டுக் கட்டா யோசனை வந்து கொட்டும்.ண்டி. இந்த உலகத்துல பணம்தான் பெருக... படிப்பு இல்லே. இதை நான் நிரூபிக்கட்டுமா? சின்ன: எப்படி? ராமை: என் பொன்ணு சரோஜா...படிக்காதவதானே. அதுக்கு படிச்ச வாத்தியாரையே கொண்டு வந்து கட்டி வைக்குறேன் பாரு...இப்பவே பட்டணம் போறேன். மாப்பிள்ளையை கையோட கூப்பிட்டுகிட்டு வர்ரேன், ஒன்ன என்ன சொல்றே நீ? ஏற்கனவே தீர்மானம் பண்ணுன மாப்பிள்ளே தானே அவரு. ராமை: ஆமா என் பணத்துக்காகவும், என் பொன்ணு ளுேட அழகுக்காகவும் அவன் ஆமாம் போட்டுத்தான் ஆகணும்...சரணுகதி அடைஞ்சுதான் ஆகணும்...ஏய் 'மங்கா...ஆயிரம் ரூபாவை அள்ளிக்கிட்டு வா! மாப்பிள்ளைய போயி காரிலயே கூட்டியாரேன்... மங்கா: இப்ப என்ன அவசரம்...ஆர அமர நாளேக்குப் போகலாமே! ராமை: இல்லே. இதே வேகத்துல மெயில்ல ஏறி பட்டிணம் போறேன்...படிப்பு பெரிசுல்ல, பணம் தான் பெரிசுன்னு