பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 ாக வன : (குழப்பத்துடன்) ஆமாம்மா! உன் அம்மா மகா லட்சுமி மாதிரி இருப்பா! ஒரே ஒரு நாள் வந்த விஷக் காய்ச்சல்ல, உன்னையும் என்னையும் விட்டுட்டு, தவிக்க விட்டுட்டு, திடீர்னு போய்ட்டாம்மா ம்... (பெரு மூச்சு விடுகிருர்) லட்சுமி அப்பா! அதுக்குப் பிறகு, நீங்க என்னை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிங்க... ராகவன் : ஆமாம்மா! இராப்பகலா தூங்காம உன்னைய வளர்த்தேம்மா! வேலைக்குப் போனலும் உன் ஞாபகம் தான். என் உயிரை விட மேலா நினைச்சி உன்னை வளர்த்தேம்மா! உனக்கு அம்மா இல்லேங்குற குறையே யில்லாம தானேம்மா நான் வளர்த்தேன். லட்சுமி அங்க தாப்பா நீங்க தப்பு பண்ணிட்டீங்க! ாகவன் : நான! என்னம்மா தப்பு பண்ணுனேன்! நீ கண் கலங்காம, மாற்ருந்தாய் தொந்தரவு இல்லாமலே வாழ வச்சிக் காப்பாத்துனேன். உன் மனங் கோணம, நீ கேட்டதும் எல்லாம் வாங்கித் தந்தேன். என் வாழ்க்கை யையே உனக்காக அர்ப்பணிச்சேனே. அதைத் தான் நீ! இப்பதப்புன்னு சொல்றியாம்மா! லட் மி , அது மாபெருந் தப்பில்லியாப்பா! ராகவன் . நீ நினைக்குற மாதிரி அது தப்பு இல்லேம்மா! என் கடமை! என்னேட உரிமை. அது தாம்மா ஒரு தகப்பனுக்குப் பெருமை. புரியுதாம்மா? லட்சுமி ஏம்பா! அப்பாவுக்கு மட்டும் கடமை இருக்கலாம். உரிமை இருக்கலாம். அதையே பெருமையா |ஃெனக்கலாம். அதையே உங்க மக செய்ய ஆசைப்பட்டா, படிச்சவ, பிடிவாதம் பிடிக்குரு. எதிர்வாதம் பண்ருன்னு ஏம்பா பேசுறீங்க... உங்க பனசை என்னுல் புரிஞ்சுக்கவே முடியலேப்பா!