பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


_. 51 கலா : சொல்ல வந்ததை மறந்துட்டு, ஏதேதோ சொல்றீங்களே...... ரவி : உலகம் முழுவதும் காற்று நிறைஞ்சிருக்குற மாதிரி, என் மனசு பூராவும் நீ நிறைஞ்சிருக்கே...கலா...அதை எப்படி விளக்கமா சொல்றதுன்னே எனக்குப் புரியல்லே... கலா : என்னை பாக்க வேண்டியது...பார்த்த உடனே சிரிக்க வேண்டியது. போதும்ன்னு சொன்ன, வர்ணிக்க வேண்டியது. வேற வேலையே இல்லே!... (சலிப்புடன்) ரவி : அப்படி இல்லே கலா......இங்கே பாரு...என் மனசுல உள்ளதை எழுதிக் காட்டின அது ஒவியம். அதையே வார்த்தையிலே சொல்லிக் காட்டின அது காவியம்...... புரியுதா? சுலா : அடடே...என்ைேட படத்தை இவ்வளவு அழகா எழுதி இருக்கீங்களே! எப்படி வரைஞ்சிங்க... ரவி : என் மனசுல உள்ள ஒன் முகம், அப்படியே படத்துல இருக்குது. அவ்வளவுதான்! கலா...அந்த முக்கியமான சேதியை மந்துட்டோமே..! கலா சொல்லுங்க...சீக்கிரம்? ரவி : என்னுேட ஒவியங்களை எல்லாம் எக்ஷிபிஷன்லே பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், என்னை அவர் நாட்டுக்கு இன்வைட் பண்ணியிருக்காரு. நானும் அடுத்த மாதமே வர்றேன்னு வாக்கு கொடுத் துட்டேன். கலா : நீங்க மட்டுமா போகப் போlங்க? ரவி : கண் இல்லாம முகமா? கலா இல்லாம ரவியா... (சிரிக்கிருன்)