பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 மோத எப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சையாத்தான் இருக்கும். அத்திப்பழம் அழகாகத்தான் இருக்கும், அதை புட்டுப் பார்த்தா பூச்சியும் புழுவுமாத்தான் இருக்கும்! அன்னசிப் பழத்தைப் பாரு முள்ளும், முரடுமா இருந்தாலும், உள்ளே எவ்வளவு இனிப்பா இருக்குது. பார் : பேசாதீங்க! வயித்தை பத்தி எரியுது. மாத : கடல் தண்ணியை கொண்டு வந்து கொட்டினுலும் உன் எரிச்சல் அடங்காதுண்ணு எனக்கு நல்லாத் தெரியும்... எங்கே நம்ப குழந்தைங்க... யார் : எங்க அப்பா வந்திருந்தாரு. அவர் Jn.L அனுப்பிவச்சுட்டேன். நானும் இப்பவே புறப்படுறேன். மாத ஆபீஸ்ல ஆடிட்டிங் நடக்குது. அங்க சிண்டை பிச்சுகிட்டு கணக்கு பாக்குறேன்... வீட்டுக்கு வந்தா... பார் : வேட்டியை கிழிச்சுகிட்டு ஒடுங்க! எனக்கென்ன? எப்ப பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ்னு சொல்lங்களே! ஆபீசையே கட்டிகிட்டு அழுங்க... மாத : உன்னை கட்டிகிட்டு அழறேனே! இதுக்கே கண்ணிர் பத்தலே... யார் : கடலுக்குள்ளே இறங்கி அழுங்க! கண்ணிர் வத்தாது. என்னங்க கதையா விடுறீங்க. என்னேட தேவை என்னுன்னு தெரிஞ்சு நடந்துக்க ஒரு இங்கிதம் தெரியல... இடக்கு மடக்கா மட்டும் பேச தெரியுது. மாதவன் சரி பாயிண்டுக்கு வா ! உன் தேவை என்ன? பார்வதி : விற்குற விலைவாசியில நீங்க வாங்குற சம்பளம் பத்து நாளைக்கு கூட வரலே! மாத இது தெரிஞ்ச கதைதானே... சரி மேலே போ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/70&oldid=777135" இலிருந்து மீள்விக்கப்பட்டது