பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

לאך பார் : தாள் மேலே போயிட்டா, நீங்க வேருெத்தியை கட்டிக்கலாமுன்னு தான் இந்த கலாட்டாவெல்லாம் பண்.நீங்களா? மாத வெறுப்பு வந்துட்டன எப்படி பேசினலும் திருப்பித் தாக்குறதுக்குப் பெண்கள் போல் யாராலுமே. முடியாது! சரி மேலே விஷயத்தை சொல்லுன்னு: சொன்னேன். பார் : திருப்பி திருப்பிச் சொல்ல நான் என்ன டேப் ரிக்கார்டரா? நல்லா கேட்டுக்கங்க... நான் பிறந்த வீட்டுக்குப் போறேன் நான் கேட்ட நகை, நட்டு, பண்ட பாத்திரம் எல்லாத்தையும் சம்பாதிச்சுகிட்டு: வந்து என்ன கூப்பிடுங்க... திரும்பி வர்ரேன். உங்களாலே வாங்க முடியலேன்ன விட்டுடுங்க, நிம்மதியா தான் எங்க வீட்டுல வாழறேன். மாத இது தான் உன் முடிவா? பார் : ஆமா ஒரு நாளைக்கு வாழ்ந்தாலும் நிம்மதியா வாழனும். இப்படி ஏக்கப்பட்டு பட்டு வாழறதுல என்ன பிரயோஜனம்? மாத சரி புறப்படு பார் : போக சொல்றீங்களே! உங்களுக்கு கல் நெஞ்சம். மாத புறப்படச் சொன்னது உன்னை இல்லே... என்னைத் தான்! நீ சொன்ன மாதிரியே, அடுத்த வீட்டு அருணகிரி அசந்து போற மாதிரி சம்பாதிக்குறேன். உன்னை வந்து கூப்புடுறேன்... போதுமா... பார் . ஏதோ எல்லாத்தையும் வாங்கிகிட்ட மாதிரி போதுமான்னு கேட்குறிங்க! சரி! நீங்க சொன்னதே போதும். எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு. மாத பார்த்து போ... பத்திரமா இரு. பெஞ்சாதி அருமே இல்லேன்ன தான் தெரியும். புருஷன் அருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/71&oldid=777136" இலிருந்து மீள்விக்கப்பட்டது