பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W. உனக்கு இப்ப புவியலே! போன பிறகுதான் தெரியும், புறப்படு. கடவுள் நிச்சயம்கண் திறப்பாகு... பாரு.. பாரு! யான் : பாரு... பாருன்னு பேரைச் சொன்குலும், பார்க்கக் சொன்னலும் என் மனசு மாருது... வர்ரேன். (போகிருள்) காட்சி 2 இடம் மாதவன், அருணகிரி, சேதுராமன் உள்ளே : கடற்கரை, அருணகிரி : மாதவா! என்னப்பா கடல்ல அலைகளையே பார்த்துகிட்டு இருக்குறே... கரையில எத்தனையோ மனிதத் தலைகள் உலவுதே... அதுகளைப் பார்க்கலியா! மாத உள்ளத்துல எண்ண அலைகள் உயிரை எடுக்கும் போது, வேடிக்கை என்னப்பா வேடிக்கை! மனுஷர் களை பார்க்குறப்ப எல்லாம். எனக்கு எரிச்சல் தான் வடுது. - சேதுராமன் , காய்ச்சல்காரன் வாய்க்கு எதுவும் சேக்கத் தான் செய்யும். அதுக்காக சாப்பிடாமலே இருக்க முடியுமா? உன் மனைவி கோவிச்சுகிட்டு ஊருக்கு போயிட்டா, அதுக்காக உலகத்தையே வெறுக்க முடியுமா? கவலையை விடப்பா.. மாதவன். மனுஷர்களுக்கு ஆசைன்னு இருக்குற வரைக்கும், இப்படி அவஸ்தைகள் வந்துகிட்டுதான் இருக்கும். சம்சார சாகரம்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க. நான் நல்லா சாகறேன். அருணகிரி : சாகரத்துல குளிக்கறதுக்கும் சாகசம் தெரிஞ் சுருக்கணும்பா... சின்ன அலை வந்தா தாண்டிக்கனும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/72&oldid=777137" இலிருந்து மீள்விக்கப்பட்டது