பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘கொலை நடந்த நேரத்தில் நாய் எங்கே இருந்

குது?

‘எதிர் வீட்டு நாயோடு ரகசியம் பேசிக் கொண் டிகுந்தது’

‘எப்படித் தெரியும்?’

‘யாரும் இல்லாத நேரத்தில் எதிர் வீட்டு நாயைப் பார்த்துக் குரைக்கும் இதன் குரல் கேட்டு அதுவும் பதிலுக் குக் குரைக்கும். பின்பு இரைத்துக் கொண்டே வீடு வந்து சேரும். அம்மாவை குஷிப்படுத்த மடி மீது புரளும்; அவர் கள அதைத் தடவிக் கொடுத்து அணைத்துக்கொள்வார்கள் அது அதற்கப்புறம் சூப்புக்குச் சமையலறைக்கு ஓடும்.’

‘நேற்று மாடிக்கு அது வந்ததா ‘எதிர் வீட்டு நாய் அதைவிடவில்லை ‘என்ன உளர்றீங்க’ விடுபட முடியவில்லை , நாயின் விசாரணை முடிந்தது.

நீ ‘இந்த வீட்டு வேலைக்காரியா’ ‘அந்த அம்மா எங்களை அப்படிப் பார்க்கலைங்க ‘ ‘வேலை செய்றது யார்’

‘வேலையா அப்படி ஒன்றும் செய்றதா இல்லையே; சமைப்போம், சாப்பிடுவோம் அம்மாவுக்கும் கொஞ்சம் வைப்போம்’

‘கொலை நடந்த அன்று என்ன செய்து கொண்டி ருந்தீர்கள்?