பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இது பற்றிப் பரபரப்பாக ஸ்டுடியோவில் பேசப் பட்டது.

டிரைவர் எல்லாம் வயசானவங்களாக இருக்கணும்’ ‘வண்டியைப் பார்த்து ஓட்டணுமே’ ‘அவர்கள் நிதானமாக ஒட்டுவார்கள் ‘அதுக்குத்தான் self டிரைவிங்க வேணும் என்கிறது

‘அதைவிட ஒருத்தரைக் கலியாணம் பண்ணிகிட்டு அந்த வேலையை அவரிடம் ஒப்புவித்து விடலாம்’ என்று எதிலும் பால் கலந்து பேசும் சுபாவம் படைத்த துணை நடிகை அன்று சொல்லிச் சிரிப்பு உண்டாக்கினாள்.

அந்தப் பேச்சில் புதிய நடிகை ஒருத்தி வந்து கலந்து கொள்கிறாள்.

“நீங்க எங்கே போறிங்க.'’ ‘'ஷட்டிங்குக்கு'’ ‘'படமா?’

‘அவங்க விட்டதிலே இருந்து முடிக்க என்னை Book பண்ணி இருக்காங்க . Call Sheet கொடுத்திருக்கிறேன்.

‘'அது எப்படி முடியும் ‘கதைக்காக சினிமா இல்லை.

‘புதிய திருப்பம் ஏற்படுத்த முடியும். கதாநாயகி இறந்து விடுகிறாள். அவள் தூக்க மாத்திரை சாப்பிட்ட தால் இறந்து விடுகிறாள். அவளுக்குத்தான் கணவன் நடத்தையில் சந்தேகம் வந்து விட்டது. தான் தவறிப் போய் கற்பு இழந்தாலும் பரவாயில்லை, கணவன் தவறக் கூடாது என்பதில் அவள் விடாப்பிடியான கொள்கை