பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்லையாம். Makup - man அவர் கை மறுபடியும் இவ் வளவு அழகாக இனி யாருக்கு மேக்கப் செய்யப் போகி றோம் என்று ஏங்கிக் கொண்டிருந்ததாம். இப்படி ஒவ் வொரு துணைத் தொழிலாளியையும் தவிக்க விட்டுவிட்டு அவள் போய்ச் சேர்ந்துவிட்டாள்’ என்று பேசிக் கொள் கிறார்கள்.

அங்கேயும் போலீசு தன் வாலை நுழைக்க ஆரம் பித்தது. போலீஸ் அதிகாரி வீட்டில் இப்படி ஒரு ‘டைலாக்’ பேசப்பட்டது.

‘ஏனுங்க சுந்தரத்தைத்தான் அரெஸ்டு பண்ணிட் டாங்களே மறுபடியும்?...

‘இதுதான் எங்க டெக்னிக். சினிமாவிலே ‘டூப்’ போடறாங்களே அது மாதிரிதான் இந்த சுந்தரம், இன் னும் அவள் அம்மா இவங்க எல்லாம். அவர்கள் குற்ற வாளிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கிறார் களே தவிர இன்னும் நாங்கள் குற்றவாளிகள் என்று கோர்ட்டில் நிறுத்தவில்லை. ஏழைகள் துணிந்து இவ் வளவு பெரிய குற்றததைச் செய்ய மாட்டார்கள். இது மேல் மட்டத்து விவகாரமாகத்தான் இருக்கவேண்டும். உண்மைக் குற்றவாளி கிடைக்கிறவரை இவர்கள் தான் குற்றவாளிகள். .

ஆளைத் தூக்கில் போட்டு விட்டால் ‘

‘பயப்பட வேண்டியதில்லை. நம் நீதிமன்றங்கள் நீதி வழங்கவில்லை என்று குறை கூற முடியாது; நிதானமாக வழங்கும் அவசரப்பட்டு எந்தத் தீர்ப்பும் வழங்காது. எந்தக் கொலை வழக்கும் ஏழு வருடத்திற்க்குக் குறையா