பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல் நடக்கிறது இல்லை ; அதுக்கப்புறம் இருக்கிறது கருணைமனு. ‘டூப்’ இல்லாமல் படம் எடுக்க முடியாது : கொஞ்ச நாளைக்கு அவன் கஷ்டப்பட வேண்டியதுதான். நாங்கள் வெளியே விட்டாலும் அவர்கள் விட்டுப் போவ தாக இல்லை .

‘குற்றம் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவது அநி யாயம்தானே’

இப்பொழுது செய்யாமல் இருக்கலாம், அந்த நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது, அதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்’

‘அவன் கொலை செய்யாமல் இருக்கலாம்; ஆனால் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவளை வம்புக்கு இழுத்து இருக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்?

‘உங்கள் தருக்கம் சரியாக இருக்கலாம்; ஆனால் உண்மைக்குப் புறம்பானது.

‘குற்றம் செய்தவர்களைத்தான் தண்டிக்கவேண்டும் என்பதில்லை குற்றவாளிகளைத் தண்டிக்கலாம். இது தான் எங்கள் வழக்கம்’.

போலீசு அதிகாரிக்கும் அவர்களை வீட்டில் அதிகா ரம் செய்யும் அவர் மனைவிக்கும் நடந்த தருக்க வாதம் இது.

அந்த அம்மையாருக்கு ‘மவுன ராகங்கள்’ படம் நினைவுக்கு வந்தது.

‘கார்த்திக்’ அப்பொழுது தவறு செய்யவில்லை. என்றாலும் முன் தவறு செய்திருக்கிறாள். தண்டிக்கப்பட்ட வேண்டியவள்தான் என்று சமாதானம் அடைகிறார்.