பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

ஸ்டுடியோவுக்குள் போலீஸ் ஜீப் நுழைகிறது. மூடிய கதவு திறக்கப்பட்டது. ‘ஊரைப் பற்றித்தான் விசாரிக்க வந்தார்கள்’ என்று போட ஆரம்பித்தார்கள்.

‘நேரே புரொடியூசர் அறைக்குள் அதிகாரி நுழை கிறார். அவருக்கு வியப்பாக இருந்தது.

“வாங்க சார் காஃபி, ஓவல், ஜூஸ், இது திரை அரங்க பரிபாஷை.

‘ஒன்னும் வேண்டாம் இப்பத்தான் சாப்பிட்டு வந்தோம். முதல் பொய் அது.

‘Hof ‘ ஏதாவது ‘Cool ஆகிவிட்டது என்று நினைக்கிறீங்க இன்னும் சூடு தணிய வில்லை அவர் பாஷை அது.

“டிரைவர் சுந்தரத்தை வெளியே விட்டு விட்டீர் களா ?”

‘இல்லை ‘’

‘பின் மூன்றாவது ஆள் யாராவது தேவைப்படு கிறதா? யார் வேண்டும் சொல்லுங்க அனுப்பி வைக்கி றோம்’

‘'நீங்கதான் வேண்டும்” புரொடியூசருக்குப் புதிராக இருந்தது. ‘அவன் இன்னும் ரிலீசாகவில்லையா?’ ‘அவன் ரிலீசாகத்தான் இந்த முயற்சி’ ‘வேறு யார் மீதாவது சந்தேகமா?’

‘சந்தேகப் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்குத்தான் வந்தோம்