பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதாப்பாத்திரம் சாகிறார் ; கதையை மாற்றுவதாற்குச் செய்ய வேண்டிய அடுத்த ஏற்பாடு என்ன என்பதில் ஈடு படுகிறோம்.

‘உங்கள் தொழில் பயங்கரமாக இருக்கிறதே’

‘அரசியலைப் போன்றதுதான்; இவர் இல்லாவிட் டால் ஒன்றும் நடக்காது என்று பேசிக் கொள்வார்கள். தேர்தலில் அவர் மண்ணைக் கவ்வுவார்; அடுத்த தலை வரைப் பற்றிப் புகழ்வார்கள்; இது அரசியல்; அதைவிட வேகமானது திரையுலகம்; ‘புது முகம் எதிர் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு நடிகையின் மரணம் அதிர்ச்சியை ஏற் படுத்துவது இல்லை .

‘ திரைப்படக் கவிஞர் ஒருவர் விண்மீன் விழுந்து விட்டது’ என்று கதறி அழுது இருக்கிறாரே’

‘அது அவருடைய திரைப்படத்துக்குத் தலைப்பு : ‘உங்களுக்கு இதயமே இல்லை’

‘'இல்லை என்றுதான் மருத்துவர்களும் சொல் கிறார்கள். கல்லுக்குள் ஈரம் படம் பார்த்திருக்கிறீர்களா’

‘பாரதி ராஜாவுடையதுதானே’

‘அதுதான் சினிமாக்காரன் அவன் சுக துக்கங் களைத் தோற்றுவிப்பவன்; அவன் சமநிலையில் தான் இருப்பான். கோடிக் கணக்கான பணம் கொட்டி இரைப் பான். வாரி எடுக்க முடியாமல் தூக்கி எறியப்படுவான். ஒன்றுமில்லாமல் ஆரம்பிப்பான்; ராஜேந்தர் நடை போட்டு ஓகோ என்று உயர்வான். கோபுரம் மண்மேடு ஆகும்! குப்பை கோபுரம் ஆகும். காரண காரியம் அமை யாத தொழில் இது. நாங்கள் கதையை நம்பிப் படம்