பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

‘அவள் நடிகர்களோடு கோவாபரேடிவ் பண்ணு

வாளா

‘ஆபாசமான் கேள்வியா கேக்கிறீங்களே நடிப்பில் கேட்கிறேன். ‘இவள் ஆடுவாள்; அவர்கள் நடிப்பார்கள் ‘அப்படின்னா எனக்கு ஒன்னும் புரியலையே?

‘டியூட் என்பதே அப்படிதாங்க. பெண்கள் நாட் டியம் கற்றவர்கள்; ஒழுங்காக ஆடுவார்கள். ஓரிரு நடிகர் கள் தவிர மற்றவர்கள் கோமாளித்தனமாக ஆடுவார்கள். மற்ற தொழில் விவரமெல்லாம் டைரக்டருக்குத்தான் தெரியும். அதோ வெய்யிலில் மண்டையைப் போடு றாரே அவர்தான் டைரக்டர்.

‘என்னங்க இது டைரக்டருக்கு சின்னவயசா இருக்கே ‘

‘வழுக்கை அவ்வளவுதான் ; இது தொழிலுக்கு அடையாளம்’

தலையிலே தொப்பி எதுக்குங்க?’

‘உங்களைப் போலத்தான். யாராவது கல் எறிந் தால் அடிபடாமல் இருக்கத்தான்’

‘கல்லா !

‘படம் தோல்வி அடைந்தால் முதலில் தாக்கப்படு வது டைரக்டர் தான். அவன் மட்டும் கண்லே படட்டும் டாப் கழற்றிடுறேன் என்று பேசிக்கொள்வதை நீங்கள் கேட்டதில்லையா? படம் வெற்றி பெற்றால் நடிகருக்குப் புகழ். தோல்வி அடைந்தால் டைரக்டருக்கு இகழ். இது தொழில் பண்பாடு.