பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வசனகர்த்தா ஏடும் கையுமா ஓடிக் கொண்டிருக் கிறார்.

‘அது. என்னங்க கையிலே?’ ‘வசனம் ‘என்ன விசனமாக இருக்கிறீர்? நடிகையின் மரணம் தான் காரணம்

‘தமிழிலே அழகாப் பேசுவாங்க. தமிழன்னை ஒரு தவப்புதல்வியை இழந்து விட்டாள்; அதற்காகத்தான் வருந்துகிறேன்.’

நடிகை ஊர்மிளாவை உங்களுக்குத் தெரியுமா?’

‘அவர்களைப் பேசவைக்கிறதே - நான் தான். பர்வசி கூட இவங்ககிட்டே வந்து பிச்சை எடுக்கணும்

‘முந்தானை முடிச்சு ஊர்வசியா'? ‘இல்லை. இந்திரலோகத்து ஊர்வசி’ ‘அவங்க இங்கே வந்தது உண்டா ?

‘அங்கே டான்சு ஆடி அலுத்துப் போச்சு புது மார்க்கட்டுத் தேடி இங்கே வந்து மூர்மார்க்கட்டுப் பக்கம் வந்தாங்க; அது இருந்த இடமே தெரியாமல் மறைந்து போச்சு; அங்கே இருந்த ‘பிக்பாக்கட்டுங்க’ எல்லாம் என்ன ஆனாங்க என்று கேட்டாங்க; விசாரிச்சாங்க ; யாரும் சரியாக பதில் சொல்லலை’

‘அப்புறம் திரும்பிப் போயிட்டாங்களா?

‘அவங்களைக் கேக்காமலே ஆட்டோக் காரன் கோடம்பாக்கத்துக்குக் கொண்டு போய்விட்டுட்டான்’

ஏன் அப்படி ?