பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

இன்றைய இலக்கியம். பாரதி, பாரதிதான் இவர்கள் அமரர்கள் ஆகிவிட்டார்கள். நாங்கள் தான் எங்க எழுத் துதான் திரைப்படக்கலைகள் . இளைஞர்கள் இன்று திசை மாறிப் போவது எங்களால் தான் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொன்னேன்.

நம்பிக்கை இழந்து விட்ட நம்பிகளுக்கும் நங்கை களுக்கும் நம்பிக்கை ஊட்டுவது நாங்கள் தான். ஒவ்வொரு படத்திலும் வில்லன்களைப் படைத்து, அவர்களை மேல் மட்டத்து மனிதர்களாகக் காட்டுவது, அவர்கள் சமுதாயச் சுரண்டர்காரர்கள் என்று காட்டுவது, அவர்களைக் கீழ் நிலையில் உள்ள ஹீரோக்கள் கண்டு பிடித்து இனம் காட்டுவது, அவர்கள் பெண்களை இவர்கள் மணம் முடி பது. அதோடு சமுதாயப் புரட்சியை நிறத்தி விடுவோம். இது தான் எங்க பொழைப்பு’

‘அதைக் கேக்கலை.. இந்தக் கொலையைச் செய்தது யார்?

‘உங்களுக்குத் துப்புதுலக்க வேண்டுமா? எங்கள் கதை இலாக்கவைப் போய்ச் சந்தியுங்கள் அவர்கள் clue கொடுப்பாங்க.’

‘அப்படி ஒரு இலாக்கா இருக்குதா?’

‘ஒட்டு வேலை செய்வது அவர்கள் தொழில். அவர் கள் கொடுக்கிற கதைக்குத்தான் நான் வசனம் எழுது வது