பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

‘அது இல்லாமே தமிழ்ப்படமே கிடையாது. கிழவி யைக்கூட குமரியாக்குவோம். கற்பனைக் காட்சி அமைத் துத் தருவார்கள். நான் அவளை Sight அடிப்பேன். அப் பொழுது ஒரு fight வரும். அதற்கப்புறம் தான் நான் காதலிக்கத் தக்கவன் என்று ஒரு impression உண்டாக்க முடியும் 10 பேரையாவது அடிக்கும் வலிமை படைத்த வன் தான் தமிழ் ஹீரோ. அந்தக் காலத்தில் இராமர் வில்லை வளைத்தார்; நாங்கள் வில்லன்களின் பல்லை உடைக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவள் பல்லைக் காட்டுவாள் நாங்கள் முல்லை சூட்டுவோம் :

‘புது நடிகை கராத்தே பயின்றவள்

‘அப்படியானல் அவள் 10 பேரை அடித்து வீரத்தை நிலை நாட்டுவாள். அவளுக்கு நான் சிரம் வணங்கித் தலை தாழ்த்துவேன். எப்படியும் fight இல்லாமல் எங்கள் sight - க்கு அர்த்த மே இருக்காது.

‘மறுபடியும் உங்களைச் சந்திக்கிறோம்’ என்று சொல்லிவிட்டுக் காவல் அதிகாரி விடை பெறுகிறார்.

மறுபடியும் ஒரு வாரம் கழித்துக் காவல் அதிகாரி படப்பிடிப்பில் தான் கலந்து கொள்ள வருகிறார் என்று நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள். அது கார பூர்வமான அ ரெஸ்டு அழைப்போடு உள்ளே நுழை கின்றனர்.