பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

‘சார் நீங்க ஸ்டேஷன் வரை வரமுடியுமா?’ ‘மேக்கப்பைக் கலைக்கணுமே

‘அதை நாங்க கலைக்கிறோம். Van - லே ஏற முடி யுமா?’

‘ஏன்? எதற்கு?’

‘போனவாரம் புது நடிகையோடு நடித்தீர் அல் லவா ?

‘அவளுக்குக் கவர்ச்சி இருக்கிறது; ஆனால் நடிக்கத் தெரியவில்லை ‘

‘அவர்களோடு நீங்கள் நடித்தபோது, அவளைக் கட்டித் தழுவி இருக்கிறீர்

‘ஆம்! இப்போதான் நினைவுக்கு வருகிறது’

அதில் அவள் மயங்கி உங்களை மணம் செய்து கொள்ள விரும்புகிறாள்’

1 am really happy’

ஆனால் அவளுக்கு ஏற்கனவே மணம் ஆகிவிட் டது.

‘I am disappointed’ ‘கொஞ்சம் ஓவராக நடித்து இருக்கிறீர் ‘இது தமிழ்ப்படம். அப்படித்தான் இருக்கும்’

நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்று கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கிறாரே’

அவங்க மணமானவங்கனு எனக்குச் சொல்லவில்லை

‘இதை நீங்கள் கோர்ட்டிலே வந்து சொல்லிக் கொள்ளலாம்.