பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

தானே! காற்று விலக்கினாலும் கை செயல்படவேண்டும். ஆட வந்தபிறகு அடி எடுத்து வைக்கமாட்டேன் என்றால் எப்படிங்க முடியும்?’

‘அது அல்ல; உன் கைகள்!...

‘நான் அவளை என்னமோ செய்துவிட்டேன் என்று சொல்கிறீர்களே?. என்ன செய்தேன், சொல்லச் சொல்லுங்கள்’

You have molested her’

‘Sorry . இப்படித்தான் அமைச்சர்கள் மீது கூட வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இது எல்லாம் நிலைத்து நிற்காது’

‘இந்தக் காரணத்தால்தான் ஊர்மிளா பாதிக்கப் பட்டிருக்கிறாள். இரத்த உறைவு ஏற்பட்டு, மரணம் அடைந்திருக்கிறாள்.

‘அப்படித் தவறான இடத்தில் கை வைத்ததாக எனக்கு நினைவு இல்லை’

‘இடம் தவறான இடம் இல்லை; நீங்க செய்த செயல்தான் தவறானது’

‘இந்த மாதிரி விஷயங்களை யெல்லாம் நான் சீரிய சாகவே எடுத்துக்கொள்வதில்லை; நேற்று நீ எவளோடு இருந்தாய் என்று கேட்டால், இன்று என்னால் பதில் சொல்லமுடியாது. இதெல்லாம் யார் கவனத்தில் வைத் துக்கொள்ளமுடியும். ஏதோ கைப்பட்டா குற்றம், கால் பட்டா குற்றம் என்று சொல்வதற்கு இது ஒன்னும் கணவன் - மனைவி விஷயம் இல்ல. தொழில் என்று வந்த பிறகு இந்த அற்பவிஷயங்களை எடுத்துப் பேசுவது தொழிலுக்கு அழகல்ல.