பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரைவர்

நடிகர் தரணியைப் பற்றி ஊர்மிளாவின் அபிப் பிராயம் என்ன?’

‘முரட்டுக்காளை’ ன்னு சொல்லுவாங்க.

நீர் அவளைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண் டீரே ஏன்?’

நானாக ஒப்புக்கொண்டதால் கவுரவக் குற்ற வானி ஆனேன் ; ராஜ மரியாதை கிடைத்தது. அப்படி நான் ஒப்புக்கொள்ளாவிட்டால், நீங்கள் ஒப்புக்கொள்ள வைப்பீர்கள்; அதுவரை எனக்குப் பூஜைகள் நடக்கும்.’

‘கொலைக்குற்றம் அபாயகரமானது என்பது தெரிய யாதா?

‘உங்களால் நிரூபிக்க முடியாது என்பதும் எனக்குக் தெரியும். நான் ஒப்புக்கொண்டாலும் சாட்சிகள் இல்லா மல் ஏற்கமுடியாதுன்னு சொல்வீங்க. அதுவும் எனக்குத் தெளியும்.

‘உங்களை வேலையை விட்டு நீக்கியது உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்குமே’

‘அவர்கள் என் மீது தவறு காண்பித்து வேலையை விட்டு நீக்கியிருந்தால் தவறுதான்; என்னைப் பாராட்டி விட்டு நீ அழகாக இருக்கிறாய்; நான் கெட்டுவிடக் காரணமாகிவிடுவாய்’ என்று சொன்னபோது நான் பெருமை அடைந்தேன்.

தன்னைக் காத்துக்கொள்வது பெண்ணின் உரிமை. அதனால் என்னை விலக்க வேண்டிய அவசியம் அவர் களுக்கு ஏற்பட்டது'