பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

வயசு வந்த பையன் வீட்டோடு இருக்கிறான். அவனை வச்சிகிட்டு பெண்ணுக்கு என்ன அவசரம் கலியாணத்துக்கு?’

‘அவள் நாலு இடத்துக்குப் போறவள் ஆபீசிலே உத்தியோகம் பண்றாள். எப்படி எப்படி இருக்குமோ முன் கூட்டிக் கலியாணம் செய்யறதுதான் நல்லது’

- + - ‘அப்பா தாத்தா மண்டையைப் போட்டுட்டாரு’ ‘என்னடா இது அவலட்சணமா பேசறே’

‘கீழே விழுந்து மண்டை உடைஞ்சி போச்சு அது தான் சொல்றேன்’

- x - ‘பையனை ஏன்டான்னு ஒரு பேச்சுக் கேட்க மாட் டேன் என்கிறீர்களே’

‘அவன் திருப்பிக் கேட்டால் என்ன செய்வது அது தான் பார்க்கிறேன்’

- x - ‘இவளை யாருக்காவது சீக்கிரம் கட்டித் தொலை யுங்கோப்பா’ - பையன் ‘ஏன் நீ அவசரப்படறே’ - அப்பா ‘எனக்கு வயசு ஆவுதே அதனால்தான் ‘ - பையன்

- + - ‘'இவள் யார் என்னைக் கண்டிக்கிறதுக்கு?’

“கூடப்பிறந்தவள்; நீ கெட்டுப் போகக் கூடாது . என்று பார்க்கிறாள். அப்புறம் யார்ரா வந்து உன்னைக் சுட்டிக்குவாள்? அதுதான் அவள் கவலை!