பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘என் ஆத்தா’ என்றது. அந்த அம்மையார் கொஞ்சம் அழகாகவே இருந்தார்கள் ,

திருப்பதிக்குப் போவது என்று முடிவு செய்து விட்டேன். இங்கே local சலூன்களில் அதைத் தொட மறுத்துவிட்டார்கள் உங்களுக்கு இது நன்றாக இருக் கிறது. என்று மறுப்புச் சொல்லி வந்தார்கள். தாடியைப் பறி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன், அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்; பழகிய தோஷம்.

வீட்டுக்கு வருகிறேன்; “வெளியே போய்யா! அய்யா வீட்டில் இல்லை’ என்று என் மனைவி சொல்கிறாள்;

‘அய்யா இருக்கிறார் பொய் சொல்றீங்க’ என்று சொல்கிறேன்.

அவள் சிறிது நேரம் ஆயிற்று என்னை அடையாளம்

காண .

‘அடியோடு மாறிவிட்டீர்களே’ என்றாள். முடியோடு தான் மாறிவிட்டேன்” என்றேன்.

தாடி போன பிறகுகூட என்னை மற்றவர்கள் தாடி என்றே அழைத்தார்கள் இந்தப் பெயர் என்னை விட்டு நீங்காது என்பதை உணர்ந்து கொண்டேன்; ஒரு தடவை தவறு செய்துவிட்டால் அவள் ‘ அவிசாரி தான். பத்தினி என்று சொல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்தேன்.