பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தாடியோடு இருந்தபோது ஒரு போட்டோ பிடித்து மாட்டி வைத்திருந்தேன். என் பக்கத்தில் என் சகதர்மினி உட்கார்ந்திருந்தாள், நான் நாற்காலியில் அமர்கிறேன் , அவள் பக்கத்தில் நிற்கிறாள்; சிலபேர் பாரதியின் பழைய பட என்றும் நினைக்க ஆரம்பித்தார்கள்

சிலர் ‘யார் இந்தப் பெரியவர் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். பெருமை என்பதே தாடியால் தான் வருகிறது என்பதை உணர்கிறேன்.

மொட்டை அடித்துக் கொண்ட பிறகு என்னைப் பார்த்தவர்கள் நீ வில்லனாக நடிக்கலாம்’ என்றார்கள்,

தாடிக்கும் மொட்டைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடிந்தது.

நடிப்பதில் ஆசை பிறந்தது. நடிகர் அசோகன் தான் நினைவுக்கு வந்தார். வில்லனாக நடிப்பதற்கு அவர் மொட்டை அடித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.

‘சினிமாவிலே நடிக்க வேண்டும்; என்ன செய்யலாம்?

பேட்டிகள் பல படித்து இருக்கிறேன் பாரதிராஜா வின் நினைவு வந்தது

“ஏன் அவரைப் பற்றிய நினைவு’ சரியான கேள்வி.

ஏனென்றால் அவர் மூலமாகத் தான் பல நடிகர்கள் திரையைக் கிழித்துக் கொண்டு உள்ளே வந்திருக்கி றார்கள்.