பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அg

‘புதுமுகம் என்றேன்”

‘'மொட்டை அடித்த முகம்'’ என்று அவர் கிண்டல் செய்தார்.

நான் நரி முகத்தில் விழிக்கவில்லை .

அதற்கப்புறம் அவருக்கு என்னிடம் பேசவே நேரம் இல்லை .

அப்புறம் புரிந்தது தலையில் பூச்சூடி நிலாப் போல ஒளி வீசும் வட்டமுகம் தான். புதுமுகம் என்று’.

சரி போனால் போகட்டும் போடா என்று அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பினேன்.

வடபழனி கோயிலுக்குப் போவதைக் கூட நிறுத்திக் கொண்டேன்.

‘'உங்களைப் பார்த்தால் ஒரு பைத்தியக்காரனைப் போல இருக்குது’ என்றாள் என் மனைவி.

ஏன் அப்படிச் சொன்னாள் என்பது புரியவில்லை.

பாரதியின் படத்தைக் காட்டினாள். அவருக்குத் தலைப்பாகை இருந்தது : மீசை இருந்தது; எனக்கு இல்லை .

இப்பொழுது புரிந்தது. அவரைப்போல நான் ஒரு பைத்தியம் என்பது அவள் கணிப்பு.