பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்கு ஒரு கும்பிடு போட்டேன். நீதான் அருள் செய்ய வேண்டும்'’ என்றேன்.

‘'கவலைப்படாதே கலைமகள் உனக்கு அனுக்கிரகம் செய்வாள்; எழுது'’ என்றாள்.

மகாகவி பாரதியின் அருள் கிடைத்துவிட்டது என்ற ஒரே சந்தோஷம்.

அது முதல் என்னை ஒரு மகாகவி என்று நினைத்துக் கொண்டேன்.

கவிதை எழுதுவது என்று என் பேனா எடுத்தேன். தவறு என் எழுதுகோல்’ எடுத்தேன். செங்கோல் ஓச்சியது.

என் மனைவி எதிரே நின்றாள்.

காளியைப் பற்றி ஒரு கவிதை எழுதி முடிந்தது. மகாகாளி’ என்று அதற்குத் தலைப்புத் தந்தேன் .

ஒவ்வொரு எழுத்தாளன் பின் ஒருத்தி இருக்க வேண்டும் என்பது இந்த வகையில் உண்மையாயிற்று.

‘'என்ன காளியைப் பற்றி எழுதியிருக்கிறீர்?” என்று கேட்டாள்.

‘'லட்சுமியைப்பற்றி எழுத முடியவில்லை; எனக்குக் கிடைத்த அருட்பிரசாதம் இதுதான்” என்றேன்,