பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கவிதை வடிவாக அவள் நின்றாள் ; ரசித்தேன்.

‘'நீ எனக்கு நறுந்தேன்” என்று தொடர்ந்தேன்.

‘'உன்னை அடியோடு வெறுத்தேன்” என்றாள்.

எங்கள் பேச்சுத் தேனாகப் பொழிந்தது.

‘'இதை எங்குக் கற்றீர்?” என்றாள்

‘கண்ணதாசன் காட்டிய வழி'’ என்றேன்.

அவள் சொன்னாள் “கண்ணதாசனைப் பின் பற்றுங்கள் எழுதினால் வெற்றி கிடைக்கும்” என்றாள்.

கவிஞன் ஆக முடியாது என்பதை உணர்ந்தேன். காரணம் இந்த சினிமாக்காரர்களால் கவிஞர்கள் உற்பத்தி மிகுதி என அறிந்தேன்.

வீட்டிலேயே இருந்து கொண்டு அறுக்க விரும்ப வில்லை; எங்காவது ஏதாவது எப்படியாவது என்று ஆவதற்கு உரிய வழிவகைகளைச் சிந்தித்தேன்.

லைட் பாயாக இருந்தவன் எல்லாம் லைஃப்பாய் சோப்பில் விளம்பரம் ஆகிப் பின் படிப்படியாக முன்னணி நடிகன் ஆகிறார்கள். ‘எமன்’ என்ற நடி கனின் பேட்டியைப் பார்த்தேன். கொலையாளி வேடத் தில் அவனை வெல்பவர் இல்லை என்பதால் இந்தப் பெயர் அவனுக்குப் படப்பெயர் ஆகிவிட்டது ,