பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ‘எங்கேயும் உள்ளே நுழைவது தான் கஷ்டம்; பிறகு ஒப்புக் கொள்ளலாம்'’ என்று அவன் பேட்டி கொடுத்து இருந்தான்.

இந்த சினிமா மதிக்காத ஒரு நபர் யார் என்று சிந்தித்தேன்; கதாசிரியன் என்பதை உணர்ந்தேன். அந்த இடத்துக்கு அதிகம் போட்டி இல்லை என்பதை அறிந் தேன் .

‘கதாசிரியன்’ என்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளு வதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால் அறுவை’ அதனால் உள்ளே விடுவது இல்லை என்று காவல் கூர்க்கா சொல் கிறான்.

பத்திரிகைக்குள் நுழைவது என்று தீர்மானித்தேன்.'’ பூணூல் இல்லை. உள்ளே நுழைய முடியாது என்று சென்னார்கள்.

‘அனுமதி இல்லை “ என்று எழுதி இருந்தது.

‘'ஆசிரியரைப் பார்க்க வேண்டும்” என்றேன்.

‘'அவர் மும்முரமாகத் தலையங்கம் தீட்டிக் கொண் கிறார்'’ என்று சொன்னார்கள்.

கோபம் வந்து விடுவிடு என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.