பக்கம்:நாகப்பட்டினம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை - 9. 1

சோழன் பரிசம் போட்டது. அன்று அவள் அவனுக்கு ஒரு நாள் மனைவியாகலாம் ஆனால் அப்பெருமன்னன் சோழன் பரியப் பொன்னைக் கொடுத்தான். ஆனால்,

"நாம் இவளை வரையின் நவை பிறக்கு மென்று கருதி வரையானாயினான்" (16). நவை - குற்றம்.

இஃது ஒருபுறமிருக்க் மற்றொரு வினாவை நீட்டலாம். மராத்திய மன்ன்ரில் இந்தத் திருமணக் கூத்துக்களுக்கும் நாகைக்கும் என்ன தொடர்பு? - என்ன தாக்கம்? - என்ன் இழப்பு?- எனலாம். நிலவரிக் கடுமை

இக்கூத்துகளுக்கெல்லாம் செலவிற்குச் செல்வம் ஏது? எல்லாம் அரசுக் கருவூலச் செலவுதான். அதற்கு வேளாண் மக்களிடம் நிலவரியாக அளவிற்கு மீறிப் பெறப்பட்டது. -

1683 - ஆம் ஆண்டு பிரிட்டோ பாதிரியார் எழுதிய கடிதம் ஒன்றில் முதலாம் ஏகோசி நிலவரி வசூல் செய்த முறை பற்றிக் கூறப்படுகிறது. நிலவருவாயில் ஐந்தில் ஒரு பங்கு வரியாக விதிக்கப்பட்டதென்றும் தன் விருப்பம் போல் விளைபொருட்களின் விலையை உறுதியிட்டு அதை நாணயமாகச் செலுத்த வேண்டு மென்று வற்புறுத்துகின்றார் என்றும், நிலத்தின் முழு விளைச் சலையும் விற்றால்கூட நிலவரியைச் செலுத்த முடியாமல் மக்கள் தவித்தனர் என்றும், நிலவரி கொடுக்க முடியாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர் என்றும் அவர் கடிதத்தில் கூறப்படுகிறது.

பிற அரசர்களும் குடியானவர்களைக் கசக்கிப் பிழிந்து வரிவாங்கினர்' என்பது சில ஆசிரியர்கள் கூறும் செய்தியாகும்(17) - இவ்வாறு புலவர் செ. இராசு அவர்கள் எடுத்து மொழிந்துள்ளார். ஆனால் அவர் இவற்றை மறுத்துள்ளார். ஆனால் - மேலும் ஒரு ஆனால் போட வேண்டியுள்ளது - ஆனால் மராத்திய மன்னர் அரசியலும் சமுதாய வாழ்க்கையும் என்னும் நூலில் இச்செய்தி வைரம் பாய்ந்த உறுதியாகிறது. மேலே "நிலவரி கொடுக்க முடியாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர்" என்று கண்டோமே அப்படி என்ன கடுமையான தண்டிப்பு தெரியுமா? நிலவரியை விதிக்கப்பட்ட நாளுக்குள் கட்ட முடியாது போனரல் அவ்வேளாளன் 13 அகவைக்கு மேற்பட்ட தன் வீட்டுப் பெண்ணை அரசுக்குக் கொடுத்து விடவேண்டும். இது எத்தகைய கடுமை? கடுமை மட்டுமன்று கயமையும் ஆகாதோ? இன்னும் விரிவாக மராத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/109&oldid=584991" இலிருந்து மீள்விக்கப்பட்டது