பக்கம்:நாகப்பட்டினம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாகப ட்டினம்

செய்து கொண்ட உடன்படிக்கை ஆவணமாகும். டச்சு என்பது ஆலந்து (Holand) என்று வழங்கப்படும். இப்பட்டயத்தில் ஆலந்தர் 'ஒல்லாந்தர்' என்று குறிக்கப்பட்டுள்ளனர். 'உலாந்தாக்காரர். என்றும் குறிக்கப்பட்டனர். (1.9)

இஃது உருவான நாள் 30.12.1617. இந்நாள் இப்பட்டயத்தில் "1617 ஆண்டு நள வருடம் மார்கழி மீ 30 உ' என்று குறிக்கப் பட்டுள்ளது.

இவ்வுடன்பாடு உருவாக அமர்ந்து பேசியோர் மராத்திய மன்னர் - ஏகோசியும் ஆலந்து நிறுவனச் சார்பில்,

"நாகப்பட்டணம் பெரிய கற்பித்தர் சிஞ்ஞோர் பிக்குருவோவர்' சின்னக் கற்பித்தர் சிஞ்ஞோர் தோமாசு வண் டேறோ என்னும் இருவருமாவர். இவ்விருவரும் ஆலந்து அரசினால் இலங்கை, சோழமண்டலக் கரை முதலிய இடங்களுக்கு ஆளுநராக அமர்த்தப் பெற்ற "சிஞ்ஞோர் சுமரால் மகராசா நிக்களோப்பு வண்கூஞ்சு" என்பவரின் சார்பாளர்களாகப் பங்கு கொண்டனர்.

இவ்வுடன்பாட்டுப் பேச்சு எவ்விடத்தில் நிகழ்ந்தது என்ற குறிப்பு பட்டயத்தில் இல்லை. நாகையில் நிகழ்ந்திருக்க இயலாது. ஏனெனில் ஒரு மன்னர் வந்து தங்கும் அளவில் அரண்மனையோ, வளமனையோ நாகையில் இருந்ததாக ஒரு தடயமும் இல்லை. மேலும் ஒரு மன்னன் தலைநகர் விட்டுப் புறநகரில் போய்ப் பேசுவது தகுதியானதும் அன்று. மேலும் ஏகோசி மன்னர் சில தினங்களாக ஆலந்து நிறுவனத்தாருடன் நட்பின்றி ஏறத்தாழப் பகை உணர்வுடனே இருந்துள்ளார். இந்நிலையில் ஆலந்துக்காரர் இருப்பிடத்திற்குத் தாம் சென்று பேச இசைந்திருக்க மாட்டார். எனவே, தஞ்சை அரண்மனையில் இது நிகழ்ந்திருக்க வேண்டும். நாகையில் நிகழவில்லை. -

இதற்கு முன்னரே இப்பட்டயத்தில் காணப்படும் பகுதிகள் போர்த்துகீசியருக்கும். ஆலந்துக் காரருக்கும் உரிமைகளாக

1. Senior Captain Signor Bikkururoar 2. Junior Captain Signor Thomas Van Dero 3. Signor Admiral Rajklof Van Coens

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/114&oldid=584996" இலிருந்து மீள்விக்கப்பட்டது