பக்கம்:நாகப்பட்டினம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 52 நாகபட்டினம்

செப். தொடர்: கிழக்கெல்லை: "கீழ்பாற்கெல்லை கடற்கரையில் மணற்குன்றுற் பட மேற்கும்"

பொருள்: வங்கக் கடற்கரையில் வடக்குப் பகுதியில் உள்ள நம்பியார் நகர் மணல்மேடு. அதனைத் தொடர்ந்து தெற்கில் திட்டுத்திட்டாக இன்றைய ஆரிய நாட்டுச் செட்டித்தெருப் பகுதியின் வடவெல்லை வரை உள்ள மணல்மேடு வரை நீண்டுள்ள கடற்கரைப் பகுதியின் மேற்கில் புத்தவளாகம் தொடங்கியது. செப். தொடர்: தெற்கெல்லை: - "தென்பாற்கெல்லை புகையுனிக் கிணற்றுக்கு வடக்கும், இதன் மேற்கு திரு வீரட்டானமுடைய மகாதேவர் நிலத்துக்கு வடக்கும் இதன்மேற்கு பரவைக் குளத்து மாராயன் கல்லுவித்த குளத்தின் வடகரை மேற்கு காரைக்காற்ப் பெருவழிவுற வடக்கும்".

பொருள்: தெற்கு எல்லையாக 3 பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று முன்கண்ட கடற்கரை எல்லையிலிருந்து மேற்காக வரும் கிறித்துவர் குடியிருப்புத் தெரு தொடரும் மேலைக்கோட்டை வாயில்

1. புகையுணிக்கிணறு - "இது புகை உண்ணிக்" கிணறு ஆகும். இக்கிணற்றை அக்காலத்தில் ஆழப்படுத்தியபோது புகை - அதாவது இக்காலத்தில் நாகைப் பகுதியில் நிலத்தடியில் கிடைக்கும் எரிவளி (Gas) வெளிவந்திருக்கிறது. இஃதே புகை எனப்பெற்றது. இப் புகையை இக்கிணற்றில் மறு பகுதியே நிலத்துக்குள் ஈர்த் ருக்கலாம். இதனால் புகை உண்ணிக் கிணறு எனப்பெற்றது பாலும். இப்போது இக்கிணறு அறியக்கூடவில்லை. இப்புகை ாரணமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

2. திருவீரட்டானம் என்பது எட்டு வகை வீரங்களை வெளிப்படுத்திய சிவபெருமானின் திருவிடம். நாகைக் காரோணர் அருளிச் செயல்களில் இக்கல்வெட்டில் ஒன்றும் இல்லை. அட்ட வீரட்டானத் திருக்கோயில்கள் ஒன்று அண்மையிலுள்ள திருக் குறுக்கைக் கோயில். இது கோயிலுக்கு அறக்கட்டளையாக இந்த நாகைப்பகுதி வழங்கப்பட்டிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/170&oldid=585051" இலிருந்து மீள்விக்கப்பட்டது