பக்கம்:நாகப்பட்டினம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 நாகபட்டினம்

பார்த்து அமைந்திருந்த ஒரு பெரிய ஒட்டு வீடு கண்டிராசா வீடு எனப்பட்டது. மிகப்பழைய வீடன்று: பழைய வீடு. கண்டி இலங்கையில் ஒரு நகர். இடைக்காலத்தில் அரசுத் தலைநகராகவும் இருந்தது. அவ்வரசர் குடியினர் வணிகம் கருதியோ புத்தம் கருதியோ வந்து நாகையில் வாழ்வு கொண்டனர். இதனைக் கொண்டும் சிங்கள மக்கள் நாகையில் இடம் பெற்றனர் என்று அறியலாம். சிங்களம்

இவர்தம் மொழி சிங்களம். வடமொழியும் பாளி மொழியும் கலந்த இந்தோ ஆரிய மொழி. இது நாகை நகரில் சிங்களர் வாழ்ந்த இல்லத்து மொழியாகவும், புத்த வளாகத்தில் துறவிகள் வாய் மொழியாகவும் ஒலித்தது.

6. சாவக மக்கள்

தமிழகத்தின் தென்கிழக்கில் இந்துமாக்கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் இந்தோனிசியா எனப்படும் பெருந்தீவுகளாக 5 தீவுகள் உள்ளன. ஐந்துள் யாவாவும், சுமத்திராவும் இங்கு குறிக்கப்பட வேண்டியன. "யாவா" என்பது "ஜாவா" (lawa) என்பதன் தமிழ் வடிவம். ஜ என்னும் வடமொழியிலிருந்து தமிழில் 'ய' என்றும் 'ச' என்றும் எழுதப்பெறும். விவிலியத்தை மொழி பெயர்த்த யாழ்ப்பாணத் தமிழ்ச்சான்றோர் ஜோசப் (Joseph) பை யாக்கோபு என்றும் ஜேசு வை(Iesus) "யேசு" என்றும் அமைத்தனர். இன்றும் ஜப்பானை (Japan) யப்பான்' என்றே எழுதுவர். இம்முறையில் 'ஜாவா யாவா என்றனர். தமிழ் நூல்கள் சாவகம் என்று குறிக்கும்.

இக் கீழைநாடுகளுடன் கி.மு. முதலே தமிழகத்திற்கு வணிகத் தொடர்பு இருந்ததைப் பெரிபுளுசு (கி.பி. 50 - 80) நூலாசிரியரும் தாலமி (கி.பி. 119 - 151) யும் குறித்துள்ளனர். சாவக நோன்பிகள்

சாவக நாட்டு மக்கள் நோன்பிருத்தலில் நாட்டமுள்ளவர். இதனால் நோன்பிகள் தமிழில் சாவகர் எனப்பெற்றனர். சாவக நோன்பிகள் அடிகளாதலின் (11) என்றது சிலப்பதிகாரம் . சங்க இலக்கியமாகிய மதுரைக் காஞ்சி, "பூவும் புகையும் சாவகர் ஏத்த" (12) என்றது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் "சாவகர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/194&oldid=585075" இலிருந்து மீள்விக்கப்பட்டது