பக்கம்:நாகப்பட்டினம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் நாகை 177

நோன்பிகள் - சீனத்துறவியர் என்று சீன நோன்பிகள்மேல் ஏற்றி எழுதினார். நேரடியாகச் சாவகர் என்பது சீனரைக் குறிக்காது. சாவக நாட்டுத் துறவியரே சாவகராவார்.

சாவகத்திற்கும் தமிழகத்து நாகை நகர்க்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. மணிமேகலைக் காப்பியம்,

"சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்" (13) என்று சாவகத்தில் மழைபெய்யாது பொய்த்ததைக் குறித்து அங்கு மக்கட்குச் சோறு வழங்கத் தமிழ்நாட்டு ஆபுத்திரன் அமுத சுரபியுடன் சென்றதாக எழுதினார். ஆபுத்திரன் நாகை வழியாக இலங்கையி லுள்ள நயினாத்தீவு என்னும் மணிபல்லவத் தீவிற்குச் சென்றான். அங்கிருந்து சாவக நாடு சென்றான். - நாகையில் சாவகக் கலை

சாவக நாட்டு மக்கள் புத்த மதத்தினர். நாகைக்குப் புத்தத் தொடர்பு கருதியும், வணிகம் கருதியும் வந்தனர். புத்த வளாகத்திலும் நகரில் ஆற்றங்கரையிலிருந்த புத்தப் பள்ளியிலும் வழிபாடு நடத்தினர். நாகையில் வெண்கலத்தாலான புத்தர் சிலைகள் நூற்றுக் கணக்கில் கிடைத்துள்ளன. அவை இந்தோனிசியச் சிற்பத் திறன்கொண்டவை என்பது சிற்ப வல்லுநர் கருத்து. இந்தோனீசியச் சாவகத்தில் போராடிதூர் என்னும் ஊரில் அமைந்த புத்தக் கோயில் உலகச் சிறப்பைப் பெற்றது. அதில் 504 புத்தர் சிலைகள் இருந்ததாக அங்குச் சென்ற சீனப் பயணி இதிசிங் (671 - 695) பதிந்துள்ளார். அவற்றில் நாகர் நகர்ச் சிலைகள் அங்கிருந்து வந்திருக்கலாம். அன்றி அந்நாட்டுக் கலைஞர்களால் இங்கு வழங்கப்பட்டிருக்கலாம். அன்றித் தமிழ்க் கலைஞர்கள் சாவகம் சென்று பயின்று வந்திருக்கலாம். எனவே இதன் தொடர்பை நோக்கினாலும் சாவகர் - நாகையர் தொடர்பு விளங்கும். சாவக மன்னன் விகாரை

வணிகத்தைப் பொறுத்த வரை இறக்குமதியும் ஏற்றுமதியும் வளர்ந்தன. இடையில் அந்நாட்டு சிரீவிசய மன்னன் மாறுபட்ட செயல்களைச் செய்தான். பின்னர் வணிகம் தொடர்ந்தது. வணிகப் பெருக்கால் சாவக மக்களுக்கென நாகையில் தனியொரு வழி பாட்டுப்பள்ளி எடுக்கும் எண்ணம் எழுந்தது. சாவக மன்னனான சூளாமணிவர்மனும் அவனுக்குப் பின் அவன் மகனும் நாகையில் らT.13.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/195&oldid=585076" இலிருந்து மீள்விக்கப்பட்டது