பக்கம்:நாகப்பட்டினம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 88 நாகபட்டினம்

பர்மாவின் அம்சபதி மன்னனாகிய இராமபதி என்பவன் தன் அலுவலன் சித்ரதுரிதனுடன் புத்தத் துறவிகளை இலங்கைக்கு அனுப்பினான். அவர்கள் பர்மாவிற்குத் திரும்பும்போது புயலால் கலம் கெட நாகையில் கரையேறிப் புத்தக் களத்தில் தங்கியிருந்து சென்றனர். இஃதும் பர்மியரது தொடர்பிற்கு ஒரு சான்று.

போர்ச்சுகீசியர், ஆலந்தர் நாகையிலிருந்தே தம் வணிக நிறுவனத்தால் பர்மாவை அடைந்தனர். பர்மா நாட்டு விளை பொருள்கள் நாகையில் இடம்பெற்றன. குறிப்பாகப் பர்மா அரிசி, பர்மா தேக்கு இடம் பெற்றன. பர்மா நாட்டுத் தலைநகர் இரங்கூனில் தமிழகத்து நகரத்தாராகிய செட்டிமார்கள் வட்டிக்கடை வைத்து மற்றும் சில வாணிகம் நடத்தினர். பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட தமிழர் இங்கு வந்து சேரப் பட்டிபாட்டையும் நினைக்க வேண்டி யுள்ளது. இவற்றையெல்லாம் ஒன்று கூட்டி நோக்கினால் பர்மியத் தொடர்பு நாகைக்கு உண்டு என்றும் பர்மியர் வருகை வணிக மாகவும் நிகழ்ந்தது என்றும் கொள்ளலாம். பர்மிய மொழி -

பர்மியரின் பர்மியமொழி இங்கு எங்கும் ஒலிக்கவில்லை போலும். ஆனால் அம்மொழியின் நெடுங்கணக்கு தென்னிந்தியப் பல்லவர் மொழியின் நிழற் கொண்டதாக உள்ளது. பல்லவர் பர்மியர் தொடர்பும் நாகை வழியாகத்தான் நேர்ந்திருக்கும்.

13. குடகர் என்னும் கேரள மக்கள் தமிழ் மன்னராகிய சேரரே கேரளர். திராவிட இனத்தாருள் ஒருவர். நாகையில் இவர்தம் வருகை நிலவழியாகவும் நீர் வழியாகவும் அமைந்தது. நீர்வழியாக மிளகு மூட்டை மூட்டையாக வந்தது. இவர் வருகை கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே நாகையில் அமைந்திருக்கும். + 18ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மலையாளத்தார் சிறு தொழில் நாடியும், தேநீர்க் கடைகள் அமைத்தும் சில உணவு விடுதிகள் அமைத்தும் தொழிலராக வந்தமைந்தனர்.

காலப்போக்கில் தமிழர்களுடன் உறவும் கொண்டனர். இங்கு தங்கினர். சில மலையாளக் குடும்பங்கள் நாகையில் அமைந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/206&oldid=585087" இலிருந்து மீள்விக்கப்பட்டது