பக்கம்:நாகப்பட்டினம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 23 a.

என்னும் புறப்பாட்டும் இதனைக் காட்டுகிறது. இந்த நடுகல் உருவமே காலப்போக்கில் சிவலிங்க வடிவ வழிபாடாயிற்று. தமிழ்ச் சைவம் .

மரத்திலும் கல்லிலும் இயற்கையான வடிவமைப்பாக இலிங்க வடிவம் காட்சி தந்ததையும் இயற்கையில் தோன்றிய சிவலிங்கமாகக் கருதினர். இவ்வாறு இயற்கையில் தானே தோன்றியதைத்தான் தான்தோன்றி இலிங்கம் என்றனர். தான்தோன்றி மலை என்றொரு மலை உள்ளது. இன்னம்பர் என்னும் சைவத்திருநகரில் அமைந்த சிவபெருமானுக்குத் தான் தோன்றி ஈசர் என்று பெயர். பிற்காலத்தில் இச்சொல் அகந்தை கொண்டவனைக் குறிக்கும் சொல்லாகியுள்ளது. இவற்றை எல்லாம் ஒருங்கு சேர்த்துக் கருதினால் சிவனும் சைவமும் தமிழ் மண்ணில் தோன்றியவை என்ற உண்மையை உணரலாம்.

இதனால்தான் மாணிக்கவாசகர்,

"தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி" (11) என்று அறிவித்தார். இஃதே சைவரின் முழக்கமும் ஆயிற்று. ஐரோப்பியக் கிறித்துவப் பெருமகனார் முனைவர் சி.யூ. போப்பையர் சைவம் பற்றி,

"சைவ சிந்தாந்தமானது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரியசமயம்; தமிழர் சமயம் தென்னிந்திய வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொன்மைச் சைவம், பெருஞ்சமயம். ஆரியர் வருகைக்கு முன்னரே சைவ சமயம் தமிழர் நெஞ்சகத்தில் நிறைந்து விளங்கியது" என்று எழுதியமை உண்மை பொதிந்த எழுத்தாகும். சைவ சமயத்தின் மொழியும் தமிழே. தமிழ் என்னும் சொல்லுக்கே "சிவம்" என்னும் பொருளையும் கண்டனர்.

"தமிழ் சிவம் இனிமை எனும் தனிப்பொருளாம்" என்று கழாரம்பர் என்னும் பழம்புலவர் தம் பேரிசை நூற்பாவில் குறித்தார்.

காமிக ஆகமம் என்னும் வடமொழி நூலும் "சிவபெருமானுக்கு வழிபாடு ஆற்றும் போது தமிழ் வேதங்களை ஒதுதல் வேண்டும்" என்று எழுதிக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/249&oldid=585130" இலிருந்து மீள்விக்கப்பட்டது