பக்கம்:நாகப்பட்டினம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 2.49

புத்த சமய அறக்கட்டளைகளை மட்டும் ஏப்பம் விட்டுச் சைவ சமய அறக்கட்டளைகளை விழுங்காமல் சமயத்துக்குச் சமயம் ஒருதலைச் சார்பு செய்யக்கூடாது என்று சமமாக நடந்துள்ளனர் போலும். இவை போகட்டும். -

பிற்காலச் சோழமன்னர்கள் கோயில் திருப்பணிகளையும் அறங்களையும் காரோணர்க்குச் செய்திருக்கலாம். தடயம் இல்லை. ஆனால் கோயிலின் இரண்டாவது திருச்சுற்றுத் தெற்குச் சுவரின் அடியில் சோழர்கால ஓவியம் உள்ளது. அதன் மேல் பூச்சமைந்து நாயக்கர் கால ஒவியம் இடம்பெற்று உள்ளது. அஃதும் மேற்பூச்சு பெற்று மறைந்துள்ளது. கயிலாயமே ஒக்கும் நாகை -

காரோணரை வழிபட்டால் பெறும் பேறுகள் பல கூறப் பட்டுள்ளன. அழகிய விடங்கர் உருவம் முருகன் என்னும் குழந்தையை நடுவில் அணைத்ததன்றோ. அதனை ஒராண்டு வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும் என்பர்.

அழகிய விடங்கருக்கு ஆண்டுப் பெருவிழாவிற்கு ஆணித்திங்கள் அத்தத்தில் கொடியேறும். 18ஆம் நாள் அட்டகொடி 24ஆம் நாள் திருத்தேர்; 27ஆம் நாள் அருள்நீர் (தீர்த்தம்) கொடுத்தல் எனச் சிறப்பு விழா நிகழும். ஆடிப்பூரத்தில் கருந்தடங்கண்ணம்மைக்குப் பூரம் கழித்தல் விழா நிகழும். அவ்வப்போது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நிகழும்.

இக்கோயிலுக்கு 1826-இல் குடமுழுக்கு நீராட்டு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. - இம்முருகனை அருணகிரியார், - "நாலு திக்கும் வெற்றி கொண்ட

சூரபத்மனைக் களைந்த நாகப் பட்டி னத்தமர்ந்த பெருமாளே." என்று பாடித் திருப்புகழ் படைத்துள்ளார்.

புலவர் ஏறு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் திருநாகைக் காரோண புராணம் அவர் புராணங்களிலேயே சிறந்தது. 61 படலங்களில், 2506 செய்யுள்களைக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/267&oldid=585148" இலிருந்து மீள்விக்கப்பட்டது