பக்கம்:நாகப்பட்டினம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை # 5

பொருத்தமான விடை கருதி எழுப்பலாம். ஏதோ ஒரு சூழலால்தான் இங்குப் புத்தத் துறவிகள் புக நேர்ந்தது. என்ன அது?

நாகர்பட்டினத்திற்குத் தெற்கே கரையோரத்தில் 7 கி.மீ. தொலைவில் பரவை' என்றொரு சிற்றுார் உள்ளது. இது நாகை - திருத்துறைப்பூண்டிச் சாலைக்கும் கடற்கரைக்கும் இடையில் அமைந்த சிற்றுார். இவ்வூர்ப்பகுதி கடலுக்குள் 1 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் ஒரு நீர்ச்சுழல் உள்ளது. அவ்வழி வருவோர் இன்னும் கவனங்கொண்டு ஒதுங்கி வருகின்றனர். இவ்விடத்தில் பல ஊறுபாடுகள் (விபத்துகள்) காலங்காலமாக நேர்ந்துள்ளன. புயற் காலங்களில் இவ்விடத் தாக்குதல் அதிகமாகும்.

ஒருமுறை 15ஆம் நூற்றாண்டில் இன்னொரு ஊறுபாடு நேர்ந்தது. பர்மாநாட்டு வெகுவில்லில் ஆண்ட இளமாபதி என்னும் மன்னன் 11 புத்தத்துறவிகளையும், சித்ரதுாதன் என்பவனையும் இலங்கைக்குப் புத்த சமயத் தொடர்பான அலுவல் கொடுத்தனுப்பி னான். அவர்கள் பணி முடித்துத் திரும்புகையில் மரக்கலம் புயலில் அடிபட்டுக் கீழைக் கடற்கரையில் ஒதுங்குகையில் அடியில் சிக்கிக் கவிழ அனைவரும் நீந்தி நாகர்பட்டினக் கடற்கரை ஏறினர் என்றும் அங்கமைந்த புத்தர் சிலையை வழிபட்டனர் என்றும் பர்மா தேசத்துக் 'கல்யாணி நகர்க் கல்வெட்டு ஒரு விவரம் தருகின்றது.

இது போன்று இலங்கையிலிருந்து பூம்புகார் வருவோர்

பலமுறை இவ்விடத்துச் சுழலால் ஊறுபாடு பெற்றுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் இலங்கையிலிருந்து தரங்கம்பாடி சென்ற கிறித்துவப் பாதிரிமார்கள் பரவைப்பகுதிச் சூழலில் சிக்கி நாகையில் கரையேறினர். இங்குள்ள வாய்ப்பு கொண்டு முதன் முதலில் கல்வி நிலையம் ஒன்றைத் தொடங்கினர் என்பதும் ஒன்று.

இவை போன்று அவ்வப்போது காலங்காலமாக இந்த ஊறுபாடு நிகழ்ந்து வந்துள்ளது. இவ்விடம் அத்தகையது என்பதற்குச் சங்க இலக்கியத்திலும் சான்று உள்ளது. அதனை வரலாற்று மூன்றாவது, கல்லில் காண வேண்டியுள்ளது. -

நீர்ச்சூழல் உள்ள ஊர்ப்பெயர் பரவை என்பது. பரவை என்றால் கடல் என்று பொருள். நீர்ச்சூழலால் பொங்கும் கடல் அடிக்கடி இந்நிலப்பகுதியில் புகுந்து கடற்பாங்கான நிலையைத் தோற்றுவித்தும் வடிந்தும் வந்தமையால் கடல் என்னும் பரவைப் பெயர் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/33&oldid=584915" இலிருந்து மீள்விக்கப்பட்டது