பக்கம்:நாகப்பட்டினம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 - - நாகபட்டினம்

பொதுச் செயலாளராகப் பணியாற்றி நிறைவேற்ற நேர்ந்தது நாகைப் பெருமக்களும் வெளியூர்ப் பெருமக்களும் மனம் பற்றி உதவினர்; புலவர்கள் உழைத்தனர். யான் ஆற்றிய பணிகளில் இது மனநிறைவு தரும் முதன்மையான பணி.

சிலைப் பாட்டு

ஒன்றைக் குறிக்க வேண்டும். இச்சிலையின் அடிப்பீடம் கருங்

கல்லாலாகியது. திருவாவடுதுறைச் சைவத் திருவிடத்துத் தலைவரவர்கள் இதற்கு முழு நன்கொடையும் வழங்கினார்கள். இதன் வடபுறக் கல்வெட்டில் உள்ள அறுசீர் விருத்தம் குறிக்கத்தக்கது. வெளியாராலும் வெளி நாட்டாராலும் சுவைக்கப்பெற்றுப் படியெடுத்துச் செல்லப்பட்ட சிறப்புடைய அது கீழ் வருவது: "நாகையில் பிறப்பை வைத்தார்;

நாகையில் தமிழை வைத்தார்; ஒகையில் துறவை வைத்தார்;

ஒளியினில் இறைமை வைத்தார்; வாகையில் வாழ்வை வைத்தார்;

வகைவகை நூல்கள் வைத்தார்; കൃത്ഥൻ சிலையை வைத்தோம்:

அவர்நெறி செயலில் வைப்பீர்". (11) இதன் அடியில் 'புலவர் கோவை. இளஞ்சேரன்’ என்றிருப்பது இன்றும் என்னை மகிழ்விப்பது.

மலை மலர்

இவ்விழாவின் போது நாகைத் தமிழ்ச் சங்கச் சார்பில் பதிப்பாசிரியனாக யான் அமைய மலர்ந்த "மறைமலையடிகளார் நினைவுமலர்" மலர்க்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பெற்று நிற்பது தனித்தமிழில் உருவானது என்பது குறிக்கத்தக்கது.

மலைக்குப் பாளம்

அடிகளார்க்குத் தென்பகுதிப் புகைவண்டித்துறை ஆற்றிய நினைவுப் பதிவு நன்றியுடன் குறிக்கத்தக்கது. நாகைப் புகைவண்டி நிலையத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/356&oldid=585237" இலிருந்து மீள்விக்கப்பட்டது