பக்கம்:நாகப்பட்டினம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை-நாகை 3.59

என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் பியூர் (Bur)என்பார் பதிந்துள்ளார். நாகையில் அறிவியலும் அதன் பங்கான பொறி யியலும் கால் வைத்துள்ளன. இதனால் நாளைய நாகையின் வரலாறு இந்திய நாட்டில் ஒரு வளந்தரும் இடத்தைப் பெறும். நாகைக்கும் வளந்தந்த வரலாற்றை உண்டாக்கும். அவ்வரலாற்றுச் சிறப்பு எவ்வாறிருக்கும் என்பதையும் இக்காலக் கணிப்பொறி (Computer) கொண்டு கணிக்கவும் முடியும். ஒருவ னுடைய உறுப்புஸ்அமைப்புகளையும் முக அமைப்பையும் வைத்து அவன் உருவப்படத்தைக் கணிப்பொறி உருவாக்கி விடுகிறது. இதன்படி உள்ளதை வைத்து வருவதையும் கணித்துப்பார்த்தால் நாகையின் நாளைய வரலாறு வளங்காட்டும் வரலாறாக அமையும்.

ஆ. பெயர் நாகை

இன்றைய பெயர்

'நீர்ப்பெயற்று' என்ற முதற்பெயரில் துவங்கி, பதரி திட்டை' நாகர்பட்டினம் - நாகானனம் - நெகமம் - நாகபட்டினம் என்று பெயர் மாறியதைக் கண்டோம். அயல் நாட்டார் தம் ஒலிப்பிற்கு ஏற்பப் பல்வகை ஒலிப்பில் நாகர்பட்டினத்தைக் குறித்தனர்.

நாகபட்டினம்

இங்கு ஒன்றைப் பதிந்துவிட வேண்டும். அது நாகப்பட்டினமா, நாகபட்டினமா என்பது. உச்சிமேற் புலவர் கொள்

நச்சினார்க்கினியர் முதல் நிறைதமிழ்ச்செம்மல் மறைமலை யடிகளார், புலவர் ஏறு மீனாட்சிசுந்தர் பிள்ளை முதலிய புலமையர் வரை அனைவரும் நாகபட்டினம் என்று, இடையில் ஒற்று 'ப்' போடாமலே எழுதியுள்ளனர்.

ஆனால், வழக்கிலும் இக்காலப்பதிவுகளிலும் நாகப்பட்டினம் என்றே எழுதப்படுகின்ற இப்பெயர் பற்றிய ஆய்வைக் கொள்ளாத நிலையில் யானும் நாகப்பட்டினம் என்றே கையாண்டேன். ஆய்வில் நாகர் தொடர்பால் ஏற்பட்டது நாகர்பட்டினமே என்று முடிவு கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் கவனங் கொள்ள வேண்டியுள்ளது.

பாம்புத் தொடர்பில் நாகம்-பட்டினம் என்று இரண்டு சொற்களும் புணரும் போது நாகம் என்பதன் 'ம்' போய் 'ப்' ஆக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/377&oldid=585261" இலிருந்து மீள்விக்கப்பட்டது