பக்கம்:நாகப்பட்டினம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று - நாளை - நாகை 369

அங்குள்ள இடையூறான நெருக்கடி தீரும். வெளியேறும் பேருந்துகளுக்கு ஒரு நிற்கைத்தளமும் ஒதுக்கலாம். -

இரண்டு - -

அங்குள்ள தீயணைப்பு நீர்த்தொட்டி நோயின் பிறப்பிடமாக உள்ளது. கெடு நாற்றத்தை அள்ளி வழங்கி வருகிறது. அதனைத் தூர்த்து அங்கொரு சிறிய பூங்கா அமைத்து நகராட்சிப் பொறுப்பில் நாளும் அழகியதாய்ச் செய்ய வேண்டும். மூன்று

கடற்கரையில் புகைவண்டித் துறைக்கு உரியதாய் இக்காலத் தமிழ்நாடு பயணிகள் விடுதியை ஒட்டியுள்ள மலங்கழி இடத்தைப் படகுத்துறை ஆக்க வேண்டும். இவ்விடம் புகைவண்டித் துறை இடமானால் அவர்கள் செப்பமாக்க வேண்டும்.

நான்கு -

நெல்லுக்டை மாரியம்மன் கோயிலின் வடக்கில் சிதைந்து கிடக்கும் குளம் துர்க்கப்பட்டு அங்கு அரசுக் கூட்டுறவுச் சிறப்பங்காடி அமைத்து நுகர்பொருள்கள் வழங்கும் வாணிப வளாகமாக அமையப் பெரும்கட்டடம் எழுப்பப்படலாம்.இக்து இரண்டு பயன் களை நல்கும். இடம் தெளிவடையும், மக்கள் பயன்பெறுவர். துர்க் காமல் சுற்றுச்சுவர்களை வலுப்படுத்தி, கீழ்நிலவறை வளாகமாகவும் அமைக்கலாம். நீர் இறைப்பால் மழைக்கால நீரை நீக்கலாம். நகர மைப்பில் இச்செயல் ஒரு புதுமை பெறும்.

ஐந்து -

அழகர் கோயிலின் பின்புறத்திலும், நடுவர் கோயிலின் பின்புறத்திலும் உள்ள குளங்கள் எவ்வகை பயனும் இன்றி உள் ளன. இவற்றின் கரைகளைச் செப்பம் செய்து ஒன்றை நீச்சல்குளம் (Swimming Pond) 31sosog Limuusų É#Fév fểgæib (Swimming Pool) ஆக்கலாம். ஒன்றை நிலவரைப் பண்டசாலையாக்கலாம்.

황 - புதிய பேருந்து நிலையத்தின் மேற்கில் அறமன்ற வளாகத்தின் தெற்கில் உள்ள தாமரைக்குளம் கட்டட அடித்தளத்திற்கு ஏற்பத் துர்க்கப்பட்டுப் புத்தமைப்பான குடியிருப்புகளுக்கு திட்டமிட்ட வகையில் வழங்கப்படலாம். இவ்வாறு முன் ஒரு நோக்கம் இருந்தது. நகரும் அழகு பெறும். புதிய பேருந்து நிலையமும் புத்தமைப்புக்

「らf.25_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/387&oldid=585274" இலிருந்து மீள்விக்கப்பட்டது