பக்கம்:நாகப்பட்டினம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. நீர்ப்பெயற்று இளந்திரையனுடைய காஞ்சிபுரத்தை அடைய, பாணனுக்கு வழிசொல்லும் உருத்திரங்கண்ணனார்,

"நீர்ப்பெயற் றெல்லையைக் கடந்தால் பட்டினத்தை அடைவாய்" என்றார். இங்கு அடைமொழியின்றிப் பட்டினம் என்று பொதுவாகவே குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் உரைவகுத்த நச்சினார்க்கினியர் இதனைக் காவிரிப்பூம்பட்டினம் என்று கூறாது பொதுவாகப் பட்டினம் என்றே எழுதினார்.

பத்துப்பாட்டைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் நீர்ப்பெயற்றெல்லை என்பதற்கு அடிக்குறிப்பு எழுதும்போது,

"மதுராந்தகம் தாலுக்காவில் நீர்ப்பேர் என வழங்கும் ஒரூர் உண்டு. அது இதுவாக (நீர்ப்பெயற்று என்னும் ஊராக) இருக்கலாம்" என்று தோன்றுகிறது" (12) என்று குறித்துள்ளார். இவ்வாறு தோன்றுவதைக் கொண்டு பார்த்தால் மதுராந்தகம் பக்கமுள்ள 'நீர்ப்பேர் ஊரைத் தாண்டிக் காவிரிப்பூம்பட்டின எல்லைத் தெற்கே உள்ளது. எனவே, உ.வே.சா. அவர்களும் நச்சினார்க்கினியர் காவிரிப் பூம்பட்டினம் என்று குறிக்காததை ஏற்றே குறித்தார் என்று கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறாயின் நீர்ப்பேர் என்னும் ஊருக்கு அண்மையிலுள்ள எயிற்பட்டினத்தைப் பட்டினமாகக் கருதுவதாகத் தெரிகிறது. -

எயிற்பட்டினம் என்று கொள்ள அடைமொழி இல்லை என்றாலும் அவ்வாறு முதற் பார்வையில் கொள்வதற்கு இடம் உண்டு.

காஞ்சிபுரம் செல்லும் வழியில் எயிற்பட்டினம் இருக்கிறது. 'காஞ்சிபுரமே எயிற் கோட்டத்தைச் சேர்ந்தது என்று ஒரு கல்வெட்டு குறிக்கின்றது. தற்போதும் தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் எயில் என்றொரு சிற்றுார் உள்ளது. (பாண்டி நாட்டிலும் எயில் என்னும் பெயர் கொண்ட ஊர் உண்டு)

எனவே எயிற்பட்டினத்தைக் குறிக்கலாம் என்று கருதலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/39&oldid=584921" இலிருந்து மீள்விக்கப்பட்டது