பக்கம்:நாகப்பட்டினம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை - 29

இவை இரண்டிற்கும் இடையில் ஓர் ஊடாட்டம் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அது நாகநாட்டார் குடியேற்றம். புத்த சமயத் தொடர்பிலும், ஓரளவில் அரசுத் தொடர்பிலும், பெருமளவு வாழ்வுத் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க அளவு வாணிபத் தொடர்பிலும் நாகநாட்டார் நீர்ப்பெயற்றில் குடியேறினர். இங்கு மட்டும் அன்று: இந்தியாவில் பல பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றம் பையப்பையு நிகழ்ந்தது. நாகர்கோவில், நாகபுரி, நாகர்ர்ச்சுனம் முதலிய பெயர்களே இதனைச் சொல்லி நிற்கின்றன.

நிகமா

இங்கு இடம் கொண்ட நாகர், தம் மொழிச் சொல்லாலும் இப்பேரூரைக் குறித்தனர். அவ்வாறு குறிக்கப்பெற்ற பெயர் நெகமா என்பது. இதனைப் பிற்காலக் குறிப்புகளிலும் புத்தர் சிலைகளின் பீடத்திலும் காண்கிறோம். நில வரலாற்று அறிஞராகிய தாலமியின் (Clandius Ptolemy) sirguib @.ufl. 118-161. ai&gfrauğl @gsstrl-frib நூற்றாண்டின் முற்பகுதி. இவர் கி.பி. 150-155 அளவில் இந்தியாவைச் சுற்றிக் கண்டு புவியியல் என்னும் குறிப்பிடத்தக்க நூலை எழுதினார். அதில் தமிழ்நாட்டுக் கிழக்குக் கடற்கரை நாட்டைப் படாய் என்று தம் கிரேக்க மொழிப் பாங்கில் குறித்தார். இது பட்டினம் - பட்டினநாடு என்பதன் கிரேக்க ஒலிப்பு என்பர். இந்நாட்டில் பல ஊர்களை - நகர்களை அவர் கேள்வியுற்ற பெயரில் தம் மொழி ஒலிப்பில் குறித்துள்ளார். அவற்றில் ஒன்று நிகமா.

தாலமியின் புவியியல் குறிப்பேடு இந்திய வரலாற்றிற்கு - சிறப்பாகத் தமிழ்நாட்டு வரலாற்றிற்கு ஒர் ஒளிவிளக்கு உறுதிச் சான்றாகக் கொள்ளப்படுவது, அவர் இங்கு வந்த போது நாகர்கள் இப்பேரூரை நிகமா என்று குறிப்பதறிந்தே நிகமா' என்று தாமும் குறித்தார். (18) காரைக்கால் பகுதியில் நெகமம் என்றொரு ஊர் இக்காலத்தும் உள்ளதை ஒரு சான்றாகவும் கொள்ளலாம்.

எனவே, நிகமா என்னும் குறியீடு ஐந்தாவது கல்லாகத் தோன்றியது. இதன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடக்கம் என்று ஏறத்தாழ என்னும் அடைப்பில் - கூறலாம்.

அடுத்து நம் கவனத்தைக் கவர்வது காவிரிப்பூம்பட்டினம் கடற் கொந்தளிப்பால் அழிவுற்ற நிகழ்ச்சி. அதன் அழிவால் குடிபெயர்ந்த அப்பட்டினத்து மக்கள் தெற்கே ஒரளவில் கடற்போக்கு வரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/47&oldid=584929" இலிருந்து மீள்விக்கப்பட்டது