பக்கம்:நாகப்பட்டினம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாகபட்டினம்

நாகசேனர் என்பாரது "மிலிந்த பிரஃன" என்னும் நூலிலும் "மிலிந்த அரசனின் வினாக்கள் என்னும் நூலிலும் இந்நகர் "கோலப்பட்டன்" என்று சிறப்பாகக் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் காலம் கி.மு. 150.

கி.பி. 23-79 (முதல் நூற்றாண்டு காலத்தவரான பிளினி, இந்நகரைக் "காபேரிசு எம்போரியம்" என்று குறித்துள்ளார்.

கி.பி. 50-80 காலத்தவரான பெரிபுளுசின் ஆசிரியர் இப் பட்டினத்தைக் "காமரா" என்றும் தம்மொழி ஒலிப்பில் குறிப்பவர்,

"வடக்கேயிருந்து வரும் கப்பல்கள் தங்க வாய்ப்பான துறைமுகங்களுள் முதன்மை இடம் வகிப்பது காமரா (காவிரிப்பூம்பட்டினம்)" (22) என்று குறித்துள்ளார்.

அலெக்சாந்திரியா நாட்டுப் பயணியாகிய கிளாடியசு தாலமி (CandiasPolamy) இப்பட்டினத்தைக் காபேரிசு என்று கிரேக்க மொழி ஒலிப்பில் குறித்துள்ளார். இவர் இப்பட்டினத்தை ஒரு வணிகச் சந்தை நகரம் என்று விளக்கியுள்ளார். இவர் இங்கு பயணம் மேற்கொண்ட காலம் கி.பி. 150 எனலாம்.

இவ்வாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை காவிரிப்பூம்பட்டினம் வளமார்ந்த நகரமாகத் திகழ்ந்ததை அறிய முடிகின்றது. இதற்குப் பின்னரே இது கடற்கொந்தளிப்பால் கடலுக்குள் போயிருக்க வேண்டும்.

ஆனால், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினரான 'புத்த தத்தர்' என்னும் புத்தச் சான்றோர் தாம் இப்பட்டினத்து மடத்தில் இருந்த தாகவும், இப்பட்டினம் வணிகத் தளமாக இருந்தது என்றும், மாட மாளிகைகள் கொண்டு விளங்கியது என்றும் தம் 'அபிதம்மாவ தாரம் என்னும் பாளிமொழி நூலில் எழுதியுள்ளார். இதில் இப்பட்டினத்தை ஆண்ட மன்னன் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. எனவே, இவர் பட்டின அழிவிற்குப்பின்னர் வந்து அப்போதிருந்த ஒரு மடத்தில் தங்கி இப்பட்டினப் பெருமைகளைக் கேள்வியுற்றுக் குறித்துள்ளதாகக் கொள்ள வேண்டும்.

மேலை நாட்டுப் பயணிகள் குறிப்புகளில் காவிரிப்பூம்பட்டினம் விளங்கிய செய்தியைக் காலப்பின்னடைவாகத் தாலமியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/50&oldid=584932" இலிருந்து மீள்விக்கப்பட்டது