பக்கம்:நாகப்பட்டினம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yii

எட்டாவது கற்றவர் பருவம்; கற்றவர் பயிலும் பருவம். நாகைபெற்ற கல்விச் செம்மல்களை இங்கு கண்டு மகிழலாம். -

இவை எட்டும் இன்று நாகையில் எந்நிலையில் உள்ளன: நாளை எந்நிலை பெறவேண்டும் என்று ஒன்பதாவது அறிவுறுத்துகிறது. அரசுகள் நாகைக்கு ஆற்ற வேண்டியவை திட்டக் கருத்துரைகளாக வைக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது பருவத்தில்.

இயன்ற அளவில் உரிய படங்கள் ஆங்காங்கு இணைக்கப் பட்டுள்ளன. இன்றைய நாகை அமைப்பின் வரைபடம் இன்றைய நாகையைக் கருப்புக் கோட்டிலும் எழுத்திலும் குறிக்கும். அசோகன் காலம் முதல் 18ஆம் நூற்றாண்டு வரை நாகைப் புத்த வளாகம் சிவப்புக்கோட்டு எல்லையிலும் இடத்தைச் சுட்டும் எழுத்திலும் அமைக்கப்பட்டுள்ளமை நாகையை இருவகைக் காட்சிக்கு உட்படுத்தும்.

மொழியளவில் தமிழ் மரபும் கலைச் சொல்லமைப்பும் ஆட்சி செய்யும். இந்நூலில் வடவெழுத்துக்கள் உரிய ஒப்புடைய தமிழ் எழுத்துக்களாகக் கைக்கொள்ளப்படுகின்றன. 'ரீ என்பது சீர் என்றிருக்கும். இவ்வாறு முன்னர் பல தமிழ்ச் சான்றோர் கையாண்டனர். "செங்கண் நெடுமால் சிரீதரா என்றழைத்தக் கால்" - என்று திருமங்கையாழ்வார் ஆட்சியை ஒரு சான்றாகக் கொள்ளலாம். 'ஸ்-ஃச்' என்று உருப் பெறுகிறது. 'F' என்பதன் ஒலிப்பை எஃப் என்று கையாள் கிறோம் அன்றோ சு என்றும் கொள்ளப்பட்டது. ஜ -ய,ச என்றும், ஷ' சட என்றும் ஹ - அ.க என்றும் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலப் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் வைக்கப் பெற்றுள்ளன.

சொல்லளவில் வைணவம் - திருமாலியம் என்றும் பிற புத்தம், இசுலாமியம், கிறித்துவம் என்றும் எழுதப்பெற்றுள்ளன. பல கலைச்சொற்கள் படைக்கப்பட்டும் எடுத்தாளப் பெற்றும் உள்ளன.

இந்த வரலாற்று ஆய்வு நூலில் படிப்போர் கருத்துத் தொடர்பு அறாமல் படித்துச் செல்ல முன்னர் விளக்கப் பெற்றவை மீண்டும் சுருக்க மாக வைக்கப்பெற்றுள்ளன. தொடர்போட்டம் கருதிய வகையில் இது கூறியது கூறல் ஆகாது. சில இடங்களில் முன்னர் கண்டோம்', 'முன்ன ரும் சுட்டப்பெற்றது என நினைவு கூர்தற்குச் சுட்டப்பட்டுள்ளன.

ஆட்சி, சமயம் இரண்டன் அடிப்படை விரிவுக் கருத்துக்கள் சற்று விரிவாகத் தரப்பட்டுள்ளன. நாகையைக் குறியீட்டுப்படமாகக் கண்டு கொள்ள அவை வேண்டப்படுபவை என்று கருதி விளக்கமாக எழுதப்பெற்றுள்ளன. காலக் குறிப்புகள் கவனத்துடனும், சான்று களுடனும் பதியப் பெற்றுள்ளன. -

இவ்வரலாற்று நூலாக்கம் ஒர் ஆய்வுப் பதிவும் ஆகும். இவ்வாறு எழுதுவதை ஒரு தற்புகழ்ச்சியாகக் கொள்ள வேண்டாம். நூலில் முன் இணைப்பாக்கியுள்ள இந்நூல் காட்டும் ஆய்வு உண்மைகள் என்னும் பட்டியல் இதனை ஆய்வு நூலே என்று பளிச்சிட்டுப் பேசும்.

"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்ல தமைச்சு",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/9&oldid=584894" இலிருந்து மீள்விக்கப்பட்டது