பக்கம்:நாகப்பட்டினம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

信慈 நாகபட்டினம்

இராசராசனை 1.219இல் வென்று தஞ்சையையும், உறையூரையும் தீக்கிரையாக்கினான். பின்னர் சோழனே ஆளச் செய்தான். அடுத்து வந்த மூன்றாம் இராசேந்திரனும் பாண்டியருக்குத் திறை செலுத்திச் சிற்றரசனாகவே ஆண்டான். இந்த 80 ஆண்டுகள் அன்றி 329 ஆண்டுகள் பிற்காலச் சோழர் சோழ நாட்டைச் சோழப் பேரரசாகவே வைத்திருந்தனர். - . .

இவ்வாண்டுக்காலம் முழுமையும் நாகர்பட்டினம் அவ்வக்காலச் சோழர் ஆட்சியில் இருந்தது. குறிப்பிடத்தக்க சிறந்த துறைமுகமாக இருந்தது. விசயாலயன் தொடக்கமாக அனைவருமே நாகைக்கு வந்து ஆளுகை கண்டு செனறனர் எனலாம். ஆனால், எவரும் நாகையில் தங்கி ஆண்டவர் அல்லர். தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை ஆகியவையே தலைநகரங்களாக இருந்தன. சில ஆண்டுகள் குடமுக்கு தலைநகர் என்றும் கண்டோம்.

முதற் குலோத்துங்கனிடம் கடாரத்தரசன் சாமந்தர் நாகையி லமைந்த புத்த விகாரை பற்றிய குறை சொல்ல அவன் பழையாறை அரண்மனையிலிருந்து கேட்டுக் குறைபோக்கினான். இதனாலும் நாகையில் அமையாமையை உணரலாம்.

மேலும் பிற்காலச் சோழர் சோழ நாட்டில் நிறுவிய ஊர்களாக உத்தம சோழபுரம், கண்டராதித்த சோழபுரம், இராசராசபுரம், அருண்மொழித்தேவபுரம், கங்கைகொண்ட சோழபுரம், சயங்கொண்ட சோழபுரம், வீரசோழபுரம், இராசேந்திரப்பட்டினம், விக்கிரமம், மதுராந்தகம் என்ற பட்டியலைக் காண்கிறோம். இவற்றில் நாகை இல்லை. நாட்டுப்பகுப்பு

சோழராட்சியில் சோழநாட்டு நிலம் அளக்கப்பட்டது. அளந்தகோல் உலகளந்த கோல் எனப்பட்டது. இஃது ஒரு புத்தாக்கம்.

அளக்கப்பட்ட சோழநாட்டுப் பகுதியில் மேலாண்மை அரசு அவ்வப்போது ஆண்ட சோழ மன்னர் கையில் இருந்தது. நாட்டுப்பகுதி நாடு என்று குறிக்கப்பட்டது. நாட்டின் உட்பிரிவுகளாக வளநாடு, கோட்டம், கூற்றம், ஊர் என்று குறிக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/94&oldid=584976" இலிருந்து மீள்விக்கப்பட்டது