பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாச்சியப்பன் வரலாகும் எனக் கேட்ட சுந்தரிக்கு மனமகிழும்; செவிகுளிரும்; உதடு கொஞ்சம் விரியும்; எழில் பல்மின்னும்! வாயில் நோக்கி விரையும் கால் (பக். 107) எனும் அடிகள் பல மெய்ப்பாடுகளின் உறைவிடமாயுள்ளது. இறுதியில் இளவரசி முல்லை’ என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. இதில் கயவன் ஒருவன் நண்பனுக்கும் காதலிக்கும் இரண்டகம் செய்கிறான். மன்னனையும், மக்க ளையும் ஏமாற்றுகிறான். காதலரைப் பிரித்துக் கொடுமை செய்கிறான். இறுதியில் உண்மை வெளிப்பட்டுத்தண்டனை அடைகிறான். பின்னர் உண்மையான காதலர்கள் அரச நிலைவிட்டு அன்பு நிலை தேடி வாழச் செல்லுகிறார்கள். இந்நிகழ்ச்சி மிக்க நயத்துடன் எடுத்துக் காட்டப்பட் டுள்ளது. பாடலில் நகைச் சுவையும் காவியச் சுவையும் மலிந்துள்ளன. காத்திருந்த கண்ணிரண்டும் பூத்துப் போச்சாம் காதலர்மேல் நம்பிக்கை தோற்றுப் போச்சாம் பூத்திருந்த சோலைகளும் இருண்டு போச்சாம் பொழுதடையும் மாலையெலாம் வெறுத்துப் போச்சாம் (பக். 153) என்ற வரிகளில் நடைநயமும், பொருள் நலமும், உணர்ச்சி வேகமும் நிறைந்துள்ளன. எப்போதும் சிள்வண்டின் ஒலியிருக்கும் இடையிடையே காய்சருகு சலசலக்கும் கொப்போடு கிளைமுறியும் ஒசை கேட்கும் குமுறிவரும் காட்டாற்றின் சீற்றம் கேட்கும் எப்போதோ புலியுறுமும் சத்தம் கேட்கும் இடையிடையே யானைகளோ பிளிறி யோடும் (பக். 154)