பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 27 ஆண்டு கழிந்த அயல்நாட் டவன்மொழியில் வேண்டுமென்றே பேசித்தாம் மேன்மையுள்ளார் போல் நடித்து (பக். 16) உலவும் இவர்களை என்னென்பது? - நால் வருண நஞ்சு மக்களை பேதப்படுத்திக் கொடுமை பல விளைத்துள்ளதைக் கண்டிக்கும் முறையில் மனுநீதி அறமானது ஒருநாள் அதை மாற்றும் நாளே தமிழர் திருநாள் என்றார் பாவேந்தர். நம் கவிஞரோ, சாத்திரங்கள் பேசிச் சதிசெய்தெம் கூட்டத்தைச் சூத்திரராய்த் தாழ்த்திவைத்த சூதெல்லாம் தூளாகிப் போகும் ஒருநாளி ல்! பொல்லாத தீக்கொடுமை வேகும்! எரிதழலில் வெந்தொழியும் அந்நாள் வரும் விரைவில் (பக். 48) என நம்பிக்கையூட்டுகிறார். ஆம்! அந்நாள் வரும் மிகு விரைவில்! இந் நூலுள் பெரும்பாலும் பெண்ணுரிமை, சாதிக் கொடுமை போன்ற கருத்துக்களே எல்லாப் பாடல்களிலும் இழைந்தோடுகின்றன. இவை இக் காலத்திற்கு இன்றியமை யாது தேவைப்படும் கருத்துக்கள். இன்றைய உலகம் எதிர் நோக்கியுள்ள பிரச்னைகளாக இன்னும் பல உள்ளன. சமூக அரசியல் பொருளாதார முரண்பாடுகள்-ஏற்றத் தாழ்வுகள்; மக்கள் வாழ்வில் மேன்மேலும் சுமத்தப்படுகின்ற நெருக் கடிகள் இவைபற்றிக் கவிஞர் எழுதியுள்ள கவிதைகள் அடுத் தடுத்த தொகுதிகளாக வெளிவந்த வண்ணமிருக்க வேண்டு மென்பது என் ஆவல். உயரத் துடிக்கும் ஒவ்வோர் உள்ளத் தின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் திரு. நாச்சியப்பன் அவர்களின் கவிதைகள் அமைந்து சிறக் கின்றன. தமிழ்த் தாய்க்கு இவ்வரிய அணிகலனைச் சூட்டி